கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு கட்டாய வேலைவாய்ப்பு வழங்குவதற்கான மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கர்நாடாகாவில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் "சி மற்றும் டி" கிரேடு பணிகளுக்கு 100 சதவீத கன்னடர்களை பணியமர்த்துவதை கட்டாயமாக்கும் மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று முதல்வர் சித்தராமையா எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை அறிவித்தார்.
தொழிற்சாலைகள், ஆலைகள் மற்றும் இதர நிறுவனங்களில் 50 சதவீத உள்ளூர் பணியாளர்களை நிர்வாகப் பிரிவுகளிலும், 75 சதவீதம் பேர் மேலாண்மை அல்லாத பிரிவுகளிலும் நியமிக்க வேண்டும் என்ற சட்ட மசோதாவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவின்படி, மேலாண்மை மற்றும் மேலாண்மை அல்லாத பிரிவுகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் பணியாளர்கள் கன்னடத்தை மொழியாகக் கொண்ட மேல்நிலைப் பள்ளிச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் அல்லது நோடல் ஏஜென்சியால் குறிப்பிடப்பட்ட கன்னட புலமைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், பெங்களூருவில் ராகிகுட்டாவிலிருந்து மத்திய பட்டு வாரியம் (CSB) சந்திப்பு வரை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 3.3 கிமீ நீளமுள்ள 3.3 கிமீ இரட்டை அடுக்கு பெங்களூரு மேம்பாலம் இன்று மாலை 3 மணிக்கு திறக்கப்பட உள்ளது. கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், போக்குவரத்து துறை அமைச்சரும், பி.டி.எம். லேஅவுட் எம்.எல்.ஏ.வுமான ராமலிங்க ரெட்டி மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“