சிகிச்சை செலவுகள் குறித்த மாநில அரசின் வழிகாட்டுதல்களை மீறி கோவிட் -19 சிகிச்சைக்காக, தனியார் மருத்துவமனை, ஒரு நாளைக்கு ரூ .1.19 லட்சம் வசூலிக்கப்பட்டதாக ஹைதராபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
எவ்வாறாயினும், நோயாளிக்கு வழங்கப்பட்ட சேவைகள் மற்றும் மருந்துககளுக்காக அவரிடம் இந்த கட்டணம் வசூலிக்கப்படுவதாக மருத்துவமனை கூறியுள்ளது.
ஜூலை 4 ம் தேதி சடெர்காட் காவல் நிலையத்தில் அரசு காய்ச்சல் மருத்துவமனையில் உதவி சிவில் சர்ஜனாக இருக்கும் டாக்டர் அஸ்ரா சுல்தானா அளித்த புகாரில், மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்பட்டதால் ஜூன் 1 ஆம் தேதி தும்பே மருத்துவமனைக்குச் சென்றதாகக் கூறினார். அவருக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டு, ஜூன் 1 இரவு முன்னர் வரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்ததாக அவர் புகாரில் தெரிவித்தார்.
கிடுகிடுவென உயரும் கொரோனா தொற்று ; ஆட்டம் காணும் கேரள தலைநகரம்!
மருத்துவமனையில் அனுமதிக்கும் போது, தன்னை ரூ .40,000 செலுத்துமாறு கூறிய மருத்துவமனை, மறுநாள் தான் வெளியேற விரும்பியபோது, மீதம் ரூ .79,000 செலுத்து வேண்டும் என்றும் அதுவரை மருத்துவமனையில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கவில்லை என்று புகாரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அவர்கள் எனக்கு சரியான மருந்துகளை கொடுக்கவில்லை, செவிலியர்கள் பொறுப்பற்றவர்களாக இருந்தனர். அவர்கள் எனக்கு சரியான நேரத்தில் மருந்து கொடுக்கவில்லை… ஒரு நாள், நான் ஜூலை 2 அன்று மருத்துவமனையில் இருந்தேன், அவர்கள் என்னிடம் ரூ .1.19 லட்சம் வசூலித்தனர். நான் ரூ .40,000 செலுத்தினேன், ஆனால் மீதமுள்ள தொகை என்னிடம் இல்லாததால், கோவிட்-பாசிட்டிவ் இருக்கும் எனது சகோதரர் வந்து மீதமுள்ள தொகையை செலுத்தும் வரை அவர்கள் என்னை பல மணி நேரம் தடுத்து வைத்தனர். இறுதியில் மருத்துவமனையில் ஒரு நாள் சிகிச்சைக்காக ரூ .1.19 லட்சம் கொடுத்தோம்" என்று அவர் தனது புகாரில் தெரிவித்தார்.
மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுல்தானா எந்த பிரச்சினையும் இல்லாமல் அனுமதிக்கப்பட்டார். "அவர் மருத்துவமனையில் தங்கியிருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட சேவைகள் மற்றும் மருந்துகளுக்கு கட்டணம் விதிக்கப்பட்டது," என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வாயிலாக தொடர்பு கொண்ட போது, மருத்துவமனை அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.
சுல்தானா மருத்துவமனையில் இருந்து ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டார், அதைத் தொடர்ந்து, சுகாதார அதிகாரிகள் அவரை நிஜாமின் மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (நிம்ஸ்) மாற்றினர்.
கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடம் - ரஷ்யாவை விஞ்சிய இந்தியா
தெலுங்கானா மருத்துவர்கள் சங்கம், தனியார் மருத்துவமனைகள் மக்களை எவ்வாறு கொள்ளையடிக்கின்றன என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது, மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
சங்கத்தின் தலைவர் டாக்டர் லாலு பிரசாத் ரத்தோட், “இந்த தொற்று சூழ்நிலையில் கூட, தனியார் மருத்துவமனைகள் நடுத்தர மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கின்றன. டாக்டர் சுல்தானா ஒரு மரியாதைக்குரிய மற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவர் மற்றும் கொரோனாவுக்கு எதிரான போரில் அவரே முன்னணியில் இருந்தார். அவர் மருத்துவமனையில் இந்த வகையான அவமானங்களுக்கு ஆளாக நேரிடும் போது, தனியார் மருத்துவமனைகள் நடுத்தர வர்க்க நோயாளிகளை எவ்வாறு கொள்ளையடிக்கின்றன என்பதை கற்பனை செய்து பாருங்கள். டாக்டர் சுல்தானா மருந்து மற்றும் கட்டணம் குறித்து கேள்வி எழுப்பியபோது, அவரை மருத்துவமனையிலிருந்து வெளியேறச் சொன்னார், ஆனால் அவர் பில் செலுத்தும் வரை செல்ல அனுமதிக்கப்படவில்லை. மக்களை கொள்ளையடிக்கும் அல்லது அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil