பிரதமர் அறிவித்த தடுப்பூசி சேவைக் கட்டணம் போதாது : தனியார் மருத்துவமனைகள்

corona vaccine: கொரோனா தடுப்பூசி சேவைக் கட்டணமாக 150 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது போதுமானதாக இல்லை என தனியார் மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன.

covid vaccine

மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையை வரவேற்றுள்ள தனியார் மருத்துவமனைகள் சேவைக் கட்டணமாக 150 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது இலவச தடுப்பூசி கொள்கையை அறிவித்தார். அப்போது கொரோனா தடுப்பூசிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் ரூ.150க்கு மேல் சேவை கட்டணம் வசூலிக்க அனுமதிக்கக்கூடாது என கூறினார்.

ஏ.எம்.ஆர்.ஐ மருத்துவமனைகளின் குழு தலைமை நிர்வாக அதிகாரியும், கிழக்கு இந்திய மருத்துவமனைகளின் சங்கத்தின் தலைவருமான ரூபக் பாருவா செவ்வாய்க்கிழமை கூறியதாவது, இந்த தடுப்பூசி கொள்கை வரவேற்கத்தக்கது இதனால் பொதுமக்கள் பயனடைவர். தரமான மருத்துவ சேவையை வழங்க தனியார் மருத்துவமனைகள் சற்று கூடுதலான கட்டணம் வசூலிக்கின்றன. 150 ரூபாய் சேவை கட்டணம் என்பது இதில் சில பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி செலுத்துவதில் எந்த சிரமத்தையும் சந்திக்காது. இருப்பினும், தடுப்பூசி கொள்முதல் கட்டணம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரே மாதிரியாக இருந்தால் சிறந்ததாக இருக்கும். இது ரூ.150 சேவை கட்டணமாக இருந்தாலும் குறைந்த விலையில் தடுப்பூசி போடுவதை உறுதி செய்திருக்கும் என கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Private hospitals said covid vaccine service charge rs 150 may be too low

Next Story
காலநிலை மாற்றத்தால் ஜி.டி.பி. குறையும் அபாயம் – ஆய்வு முடிவுகள்India, GDP, climate change
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express