ஆண்டிற்கு ஒரு முறை தான் அதுவும் 7% மட்டுமே: தனியார் பள்ளிகளுக்கு உ.பி அரசு உத்தரவு

உத்தரப் பிரதேச தனியார் பள்ளிகளில் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே பள்ளிக்கல்வி கட்டணம் உயர்த்தலாம் என்று யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிகள், ஒரு ஆண்டில் அடிக்கடி பள்ளிக்கட்டணத்தை உயர்த்துவதாகப் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். மேலும் இந்தப் புகார்கள் அனைத்து உ.பி அரசிடம் கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து தனியார் பள்ளிக் கட்டணம் ஒழுங்குமுறை சட்டம் என்ற பெயரில் புதிய சட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது.

தனியார் பள்ளிகளில் நடைபெறும் இந்த முறைக்கெடுக்கு எதிராக இந்த புதிய சட்டத்தை யோகி ஆதித்யநாத் அறிவித்தார். இச்சட்டத்தின்படி, உ.பி யில் இயங்கும் தனியார் பள்ளிகள், ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே கட்டணத்தை உயர்த்தலாம், அதுவும் 7% மட்டுமே உயர்த்த வேண்டும் என்ற உத்தரவிட்டார். ஆண்டிற்கு ரூபாய் 20 ஆயிரம் முதல் கட்டணம் வசூலிக்கும் அனைத்துத் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும்.

மேலும் இச்சட்டத்தின் கீழ் வரும் பள்ளிகள் நன்கொடை வசூப்பது தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி நன்கொடை பெரும் பள்ளிகளின் அங்கிகாரங்கள் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

×Close
×Close