நியூஸிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி அமைச்சர்; பிரியங்கா ராதாகிருஷ்ணன்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் செப்டம்பர், 2017-ல் நியூஸிலாந்து தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

By: November 2, 2020, 6:59:41 PM

நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது நிர்வாகத்தில் ஐந்து புதிய அமைச்சர்களை சேர்த்தைதையடுத்து, திங்கள்கிழமை பிரியங்கா ராதாகிருஷ்ணன் நியூசிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி அமைச்சரானார்.

இந்தியாவில் பிறந்த 41 வயதான பிரியங்கா ராதாகிருஷ்ணன் தனது மேற்படிப்புக்காக நியூசிலாந்து செல்வதற்கு முன்பு சிங்கப்பூரில் பள்ளிப் படிப்பை முடித்தார்.

“குடும்ப வன்முறையிலிருந்து தப்பிப்பிழைத்த பெண்கள், மற்றும் சுரண்டலுக்குள்ளான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” போன்ற பெரும்பாலும் கவனிக்கப்படாத மக்களின் சார்பாக வாதிடுவதற்காக அவர் தனது பணி வாழ்க்கையை செலவிட்டார்.

பிரியங்கா ராதாகிருஷ்ணன் செப்டம்பர், 2017-ல் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2019-ம் ஆண்டில், அவர் இன சமூகங்களுக்கான அமைச்சரின் நாடாளுமன்ற தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அந்த தளத்தில் அவர் செய்த பணிகள், பன்முகத்தன்மை, ஒருங்கிணைந்த வளர்ச்சி, இன சமூகங்களுக்கான அமைச்சரின் புதிய பங்களிப்புக்கான தளத்தை உருவாக்க உதவியது.

இது மட்டுமில்லாமல், அவர் சமூக மற்றும் தன்னார்வத் துறை அமைச்சரானார். மேலும், சமூக மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சராகவும் இருந்தார்.

அவர் நியூசிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி அமைச்சரானார் என்று நியூசிலாந்து ஹெரால்ட் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

நியூஸிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரியங்கா ராதாகிருஷ்ணனுக்கு கேராளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2017-இல் இருந்து புதிய எம்.பி.யாக  இருந்து வந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் கேபினெட் அமைச்சரவைக்கு வெளியே உள்ள அமைச்சராக உள்ளார். பிரியங்கா ராதாகிருஷ்ணன் தனது கணவருடன் ஆக்லாந்தில் வசிக்கிறார்.

புதிய அமைச்சர்களின் பெயர்களை அறிவித்த பிரதமர் ஆர்டெர்ன் கூறுகையில், “நான் சில புதிய திறமையாளர்களை கொண்டுவருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் பணிபுரியும் பகுதிகளில் முதல் அனுபவத்துடன்  பணியாற்றி அக்டோபர் 17ம் தேதி எங்களை தேர்ந்தெடுத்த நியூசிலாந்தை பிரதிபலிப்பார்கள்” என்று கூறினார்.

மேலும், “இந்த வரிசையில், நான் மக்களின் பலத்துடன் விளையாடுகிறேன்” என்று அவர் கூறினார்.

ஜெஸிந்தா ஆர்டெனின் மத்திய இடது தொழிலாளர் கட்சி நாட்டின் பொதுத் தேர்தலில் ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றதையடுத்து, சில நாட்கள் கழித்து பேசிய அவர்

“இது தகுதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைச்சரவையும் நிர்வாகமும் ஆகும். ஆனால் நம்பமுடியாத அளவில் வேறுபட்டது” என்று கூறினார்.

புதிய நிர்வாகம் வெள்ளிக்கிழமை பதவியேற்கும். அதைத் தொடர்ந்து அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெறும்.

“நாங்கள் கவனம் செலுத்தியவற்றில் பெரும்பாலானவை எங்கள் பொருளாதார மீட்சியை விரைவுபடுத்தியுள்ளது என்பதை உறுதிசெய்கிறது” என்று 40 வயதான பிரதமர் ஜெஸிந்தா ஆர்டென் கூறினார்.

அமைச்சர்கள் சரியாக செயல்படாவிட்டால் அவர்களுக்கு அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று ஆர்டெர்ன் எச்சரித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Priyanca radhakrishnan new zealand first ever indian origin minister

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X