Advertisment

சாவர்க்கர் பற்றி பிரியங்க் கார்கே சர்ச்சை கருத்து: பின்வாங்கும் கர்நாடக காங்கிரஸ்

பெலகாவி சட்டசபை வளாகத்தில் உள்ள வி.டி. சாவர்க்கரின் உருவப்படத்தை அகற்ற வேண்டும் என்று கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே கூறிய நிலையில், பா.ஜ.க கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
 சாவர்க்கர் பற்றி பிரியங்க் கார்கே சர்ச்சை கருத்து: பின்வாங்கும் கர்நாடக காங்கிரஸ்

முதல்வர் சித்தராமையா இந்த விவகாரத்தில் தனக்கு எந்த கருத்தும் இல்லை என்றும் கூறினார்.

Karnataka | congress: கர்நாடகாவின் பெலகாவியில் உள்ள சட்டசபை வளாகத்தில் இந்துத்துவா சித்தாந்தவாதியான வி.டி. சாவர்க்கரின் உருவப்படத்தை அகற்ற வேண்டும் என்று தகவல் தொழில்நுட்பம் அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியிருந்தார். இது பா.ஜ.க-வினரிடையே கடும் எதிர்ப்பைத் தூண்டியுள்ளது. இதனால், காங்கிரஸ் அரசு சேதத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 

Advertisment

இது தொடர்பாக எந்த முன்மொழிவும் எடுக்கப்படவில்லை என்று கர்நாடக சட்டசபை சபாநாயகர் யு.டி காதர் தெளிவுபடுத்தினார். அதே நேரத்தில் முதல்வர் சித்தராமையா இந்த விஷயத்தில் தனக்கு எந்த கருத்தும் இல்லை என்றும் கூறினார். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Priyank Kharge sets off row with Savarkar remarks, Cong distances itself

கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, “சமத்துவமின்மையை ஊக்குவிக்கும் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களுடன் நான் உடன்படவில்லை. அதே சித்தாந்தம்தான் மகாத்மா காந்தியின் கொலைக்கும் வழிவகுத்தது. அனுமதித்தால், இன்றே சாவர்க்கரின் உருவப்படத்தை அகற்றுவேன். 

ஆனால் அது விதிகளின்படி செய்யப்பட வேண்டும். அரசியலமைப்பில் எனக்கு நம்பிக்கை இருப்பதால் சபாநாயகரின் முடிவுக்காக காத்திருப்பேன். இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன்." என்று தெரிவித்தார். 

தெலங்கானாவைத் தவிர, சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததால், இது போன்ற துருவமுனை பிரச்சினைகள் பா.ஜ.க-வுக்கு உதவுவதால், சர்ச்சை தவிர்க்கக்கூடியதாகக் காணப்படுவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கர்நாடகாவிலும் சித்தராமையா அரசை சிறுபான்மையினருக்கு ஆதரவாக முன்னிறுத்த பா.ஜ.க முயற்சித்து வருகிறது.

இந்த பிரச்சாரத்தின் முன்னணி முகமான இருந்து வரும் பா.ஜ.க எம்.எல்.ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால், நேற்று வெள்ளிக்கிழமை சாவர்க்கரின் உருவப்படத்தை அகற்ற காங்கிரஸைத் துணிந்தால், "நாங்கள் அமைதியாக உட்காருவோம் என்று நினைக்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார். 

“சட்ட சபையில் 224 தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்ளனர். ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு சிந்தனை செயல்முறை மற்றும் கருத்து உள்ளது. முதலாவதாக, அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் சபையில் காலவரையின்றி கலந்து கொண்டு பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனது பொறுப்பு சமுதாயத்தை ஒன்றிணைப்பதே தவிர, பிளவுபடுத்துவது அல்ல. சாவர்க்கரின் உருவப்படத்தை அகற்றும் திட்டம் எதுவும் எனக்கு வரவில்லை. நாம் அனைவரும் ஒரு வலுவான அடித்தளத்தில் சமூகத்தை உருவாக்க வேண்டும். ஆனால் அதை அழிக்க வேண்டாம். கடந்த காலத்தை தோண்டி எடுப்பதை விட சிறந்த எதிர்காலத்திற்கான இலக்குகளை அடைவதற்காக உழைப்போம்." என்றார். 

தொடர்ந்து சட்டமேதை பி.ஆர் அம்பேத்கரை மேற்கோள் காட்டி பேசிய அவர், "ஒருவர் தேரை முன்னோக்கி இழுக்க வேண்டும், ஒருவரால் முடியாவிட்டால், அதைத் திரும்பப் பெறுவதை விட அதை அங்கேயே விட்டுவிடுவது நல்லது. மற்றவர்கள் அதை முன்னெடுத்துச் செல்வார்கள். எனவே, இதை விட்டுவிட்டு எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்." என்று கூறினார். 

அமைச்சர் பிரியங் கார்கேவின் கருத்துகளுக்கு எதிர்ப்புகள் மகாராஷ்டிரா சட்டமன்றத்திலும் எதிரொலித்துள்ளது. தற்போது நாக்பூரில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். 

கர்நாடகவின் பெலகாவி சட்டமன்ற வளாகத்தில் சாவர்க்கர் உருவப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முந்தைய பா.ஜ.க ஆட்சியில் திறக்கப்பட்டது. அந்த நேரத்தில் சித்தராமையா மற்றும் தற்போதைய துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Karnataka Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment