புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த ஊருக்கு அழைத்துச்செல்ல பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த 1000 பேருந்துகளின் பட்டியலில் ஸ்கூட்டர், ஆட்டோக்கள் மற்றும் சரக்கு வாகனங்களின் பதிவு எண்கள் இருப்பதாக அம்மாநில அமைச்சர் சித்தார்த் நாத் சிங் செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டியுள்ளார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு அழைத்துச் செல்ல 1,000 பேருந்துகளை ஏற்பாடு செய்வதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அளித்த உத்தரவாதத்தை உத்தரப்பிரதேச அரசு ஏற்றுக்கொண்ட ஒரு நாள் கழித்து, அம்மாநில அமைச்சர் சித்தார்த் நாத் சிங் செவ்வாய்க்கிழமை பேருந்துகளின் பட்டியலில் ஸ்கூட்டர்கள், ஆட்டோக்கள் மற்றும் சரக்கு வாகனங்களின் பதிவு எண்கள் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
எண்களின் முதற்கட்ட பரிசோதனையில், பேருந்துகள் என பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள எண்கள் உண்மையில் ஸ்கூட்டர்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களின் எண்கள் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளதாக என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் காங்கிரஸ் மிகப்பெரிய போலி (ஃபர்ஜிவாடா) ஆகிவிட்டது. அவர்களுக்கு புலம்பெயர்ந்தோர்களிடம் எந்த அனுதாபமும் இல்லை. அவரக்ள் புலம்பெயர்ந்தோரின் பிரச்னையை அரசியலாக்க விரும்புவதாக உ.பி. அமைச்சர் சித்தார்த் நாத் சிங் கூறினார்.
பிரியங்கா காந்தி முன்மொழிந்த 1,000 பேருந்துகளின் ஏற்பாட்டை லக்னோ அதிகாரிகளிடம் காலை 10 மணிக்குள் காங்கிரஸ் கட்சி ஒப்படைக்க வேண்டும் என்று உ.பி அரசு கோரியது. இதை அடுத்து, காங்கிரஸ் கட்சிக்கும் உத்தரபிரதேச மாநில நிர்வாகத்திற்கும் இடையிலான புதிய வார்த்தைப் போருக்கு மத்தியில் இந்த விவகாரத்தில் புதிய நிலையை எட்டியுள்ளது.
பிரியங்காவின் தனிச் செயலாளர் சந்தீப் சிங், உ.பி. மாநில உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்திக்கு திங்கள்கிழமை இரவு 11.40 மணியளவில் எழுதிய கடிதத்தில், உ.பி. மாநில அதிகாரியிடமிருந்து செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குள் லக்னோவில் 1,000 பேருந்துகளை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “உங்கள் அரசாங்கத்தின் இந்த கோரிக்கை அரசியல் நோக்கம் கொண்டதாக தெரிகிறது. ஒரு பேரழிவை எதிர்கொள்ளும் எங்கள் தொழிலாளர் சகோதர சகோதரிகளுக்கு உங்கள் அரசாங்கம் உதவ விரும்புவதாகத் தெரியவில்லை” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, விரைவாக காஜியாபாத் மற்றும் நொய்டா மாவட்ட நீதிபதிகளுக்கு பேருந்துகளை வழங்குமாறு மாநில நிர்வாகம் பிரியங்கா காந்தியிடம் கேட்டுக்கொண்டது.
பிரியங்கா காந்தியின் தனி செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், உ.பி. அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அவஸ்தி, “உங்கள் கடிதத்தின்படி, லக்னோவில் பேருந்துகளை வழங்க உங்கள் இயலாமையை வெளிப்படுத்தியுள்ளீர்கள். பேருந்துகளை காஜியாபாத் மற்றும் நொய்டாவில் வழங்க விரும்புகிறீர்கள். காஜியாபாத் மாவட்டத்திற்கு மதியம் 12 மணிக்குள் 500 பேருந்துகளை வழங்குங்கள். இது குறித்து டி.எம்.கஜியாபாத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் அனைத்து பேருந்துகளையும் பெற்று பயன்படுத்தும்.” என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கௌஷாம்பி மற்றும் சாஹிபாபாத் பேருந்து நிலையங்களில் பேருந்துகள் வழங்கப்பட வேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. "எக்ஸ்போ மார்ட்டுக்கு அருகிலுள்ள மைதானத்தில் கௌதம் புத்த நகர் மாவட்ட நீதிபதிக்கு 500 பேருந்துகள் வழங்கப்பட வேண்டும்” என்று உ.பி. அதிகாரி ஒருவர் கூறினார்.
இது குறித்து அமைச்சர் சித்தார்த் நாத் சிங் கூறுகையில், “ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தெருக்களில் நடந்து செல்லும்போது ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு பதிவு மையங்களில் உ.பி. எல்லைகளில் கூடிவருகின்றனர். இந்த நிலையில் 1,000 காலி பேருந்துகளை லக்னோவிற்கு அனுப்புவது நேரத்தையும் வளத்தையும் வீணாக்குவது மட்டுமல்லாமல் மனிதாபிமானமற்றது. ஏழை எதிர்ப்பு மனநிலையின் உற்பத்தி” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.