ரேபரேலி மக்களவைத் தொகுதியில் முதல்முறையாக போட்டியிட ராகுல் காந்தி தயாராகி வரும் நிலையில், நேரு-காந்தி குடும்பத்தின் 100 ஆண்டு கால தொடர்பை சுற்றியே காங்கிரஸ் தனது பிரச்சாரத்தை கட்டமைத்து வருகிறது.
ராகுல் தனது பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன், விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடக இடுகைகள் மூலம்-’100 ஆண்டுகால சேவை மற்றும் ரேபரேலியின் ராகுல்’ ஆகிய இரு முனை வியூகம்- விரைவில் தொடங்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தி – நான்கு முறை தனது தாயார் சோனியா வகித்த தொகுதியில் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்.
ரேபரேலியின் பச்ரவான் மற்றும் ரேபரேலி சதார் சட்டசபை தொகுதிகளில் கடந்த இரண்டு நாட்களில் 25க்கும் மேற்பட்ட தெருமுனை கூட்டங்களில் உரையாற்றிய பிரியங்கா, மோதிலால் நேரு மற்றும் ஜவஹர்லால் நேரு முதல் நேரு-காந்தி குடும்பத்தின் நான்கு தலைமுறைகள், தொகுதி மக்களுடன் எப்படி நிற்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்காக, ஜனவரி 7, 1921 முன்ஷிகஞ்ச் படுகொலையை மீண்டும் மீண்டும் பேசினார்.
1921ஆம் ஆண்டு காவல்துறையினரால் நடத்தப்பட்ட படுகொலையின் போது விவசாயிகளுடன் நின்ற மோதிலால் நேரு மற்றும் ஜவஹர்லால் நேரு காலத்திலிருந்து தொடங்கி ரேபரேலி உடனான நேரு-காந்தி தொடர்பு நூற்றாண்டு பழமையானது.
ஒத்துழையாமை இயக்கத்தின் காலத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர், பின்னர் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜவஹர்லால் நேருவும் கைது செய்யப்பட்டார்.
இந்தத் தேர்தலுக்காக ரேபரேலியில் நடைபெற்ற முதல் கட்சித் தொண்டர் கூட்டத்தின் போது, இந்தச் சம்பவத்தை பிரியங்கா விவரித்தார்.
நாங்கள் உங்கள் அழைப்பைக் கேட்டு வந்தோம். மோதிலாலும் ஜவஹர்லாலும் வந்து என்ன நடந்தது என்று பார்த்தார்கள். நான்கு தலைமுறைகளுக்குப் பிறகும் நாங்கள் உங்களுடன் இணைந்திருக்கிறோம், என்று புதன்கிழமை பச்ரவானில், பிரியங்கா சொன்னார்.
இந்த விஷயத்தை வலுப்படுத்தும் வகையில், கொலைகளைக் குறிக்கும் முன்ஷிகஞ்சின் ஷஹீத் ஸ்மாரக்கில் இருந்து பிரியங்கா தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். பாசி சமூகத்தைச் சேர்ந்த ஒரு விவசாயத் தலைவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக எப்படி நின்றார் என்ற கதையையும் இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது கட்சி.
ரேபரேலியில் தோற்கடிக்கப்பட்டு பின்னர் வெற்றி பெற்ற இந்திரா காந்தியின் உதாரணத்தை எடுத்துக்காட்டி, தனது ஆரம்பத்தின் போது, தவறுகள் செய்யப்பட்டாலும், பாடங்களும் கற்றுக்கொண்டதாக பிரியங்கா கூறினார்.
1952 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் தேர்தலுக்குப் பிறகு, ரேபரேலி மக்களவைத் தொகுதியை 72 ஆண்டுகளில் 66 ஆண்டுகளாக காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது ஒரு தலுக்தார் துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகுதான் போலீஸ் துப்பாக்கிச் சூடு தொடங்கியது என்று கூறப்படுவதால்,. இந்த பிரச்சாரம், காங்கிரஸ் எப்போதுமே விவசாயிகளுடன் நிற்கிறது, பணக்காரர்களுடன் நிற்கவில்லை என்பதை விவரிக்கிறது, என்று மற்றொரு காங்கிரஸ் தலைவர் கூறினார்.
வியாழனன்று, பச்ராவானில் பிரியங்கா நடத்திய பிரச்சார கூட்டத்திற்கு சில கிலோமீட்டர் தொலைவில், பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங்கும் கட்சியின் மூத்த தலைவர் சுரேஷ் சந்த் திவாரியும், காந்தி குடும்பம் எப்படி ரேபரேலியை விட்டு வெளியேறியது, அதேபோல் அவர்கள் மீண்டும் தேர்தலுக்குப் பிறகு வெளியேறுவார்கள், என்று தொழிலாளர்களிடம் தெரிவித்தனர்.
"உங்கள் நல்ல மற்றும் கெட்ட நாட்களில் உங்களுடன் இருப்பவர் உள்ளூர் தலைவர் தினேஷ் பிரதாப் சிங்" என்று திவாரி கூறினார்.
Read in English: Led by Priyanka Gandhi, how Congress is building its campaign in Rae Bareli
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.