பிரதமர் நரேந்திர மோடியின் “தாலி மற்றும் தங்கம்” கருத்துக்களுக்கு எதிராக கடுமையான தாக்குதலைத் தொடங்கிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தனது தாயார் சோனியா காந்தியின் தாலி, இந்த நாட்டுக்காக தியாகம் செய்யப்பட்டதாக செவ்வாய்க்கிழமை கூறினார்.
ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள சித்ரதுர்கா மற்றும் பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பேரணிகளில் பேசிய பிரியங்கா, மக்களை திசை திருப்புவதற்காக தேர்தல் வரும்போதெல்லாம் மோடி ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிடுவதாக குற்றம் சாட்டினார்.
”ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தானில் பேசிய மோடி காங்கிரஸின் செயல்திட்டம், நாட்டின் செல்வத்தை முஸ்லீம்களுக்கு மறுபங்கீடு செய்வதாகும் என்றும், ஆட்சிக்கு வாக்களித்தால் "உங்கள் தாலிகளைக் கூட அவர்கள் விடமாட்டார்கள்" என்றும் கூறினார்.
கடந்த இரண்டு நாட்களாக, உங்கள் தங்கத்தையும், தாலியையும் காங்கிரஸ் கட்சி கொள்ளையடித்துவிடும் என்று பிரதமர் கூறுகிறார். 70 ஆண்டுகள், இந்தியா சுதந்திரம் அடைந்து, 55 ஆண்டுகள் காங்கிரஸ் நாட்டை ஆண்டது, உங்கள் தங்கத்தை அவர்கள் பறித்தார்களா?
/indian-express-tamil/media/media_files/JsuqlTBlLUPIOQdDUYnK.jpg)
போர் நடந்தபோது எனது பாட்டி இந்திரா காந்தி தனது தங்கத்தை நாட்டுக்கு தானமாக வழங்கினார். என் தாயின் தாலி, இந்த நாட்டிற்காக தியாகம் செய்யப்பட்டது.
தாலியின் மதிப்பை மோடி புரிந்துகொண்டிருந்தால், இதுபோன்ற ஒழுக்கக்கேடான கருத்துக்களை தெரிவித்திருக்க மாட்டார்.
பணமதிப்பு நீக்கம் மற்றும் கோவிட் லாக்டவுன் இருந்தபோது பெண்களைப் பற்றி பிரதமர் கவலைப்படவில்லை. விவசாயிகள் போராட்டத்தின் போது 600 விவசாயிகள் இறந்தனர். அவர்களின் தாலி பற்றி பிரதமர் யோசித்தாரா? மணிப்பூரில், ஜவான் ஒருவரின் மனைவி ஆடைகளை அவிழ்த்து அணிவகுத்துச் சென்றனர். அப்போது அவர் பேசினாரா? அவளுடைய தாலி பற்றி அவர் கவலைப்பட்டாரா?
தேர்தல் வரும்போதெல்லாம் ஆத்திரமூட்டும் கருத்துகளை அவர் வெளியிடுகிறார், மதம், ஜாதி பற்றிய அறிக்கைகள் மூலம் மக்களை திசை திருப்புகிறார், ஆனால் அவர் ஒருபோதும் மக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதில்லை.
உங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைத்துள்ளதா, விலைவாசி குறைந்துள்ளதா, மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளதா, எய்ம்ஸ் அல்லது ஐஐடி கட்டப்பட்டுள்ளதா?
10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் ஏதாவது செய்திருந்தால், அவர்கள் உங்கள் முன் நிற்கும்போது ஏன் தங்கள் வேலையின் அடிப்படையில் வாக்கு கேட்கவில்லை? அவர்கள் ஏன் மதம் மற்றும் ஜாதியின் அடிப்படையில் கேட்கிறார்கள், ஏன் அவர்கள் வாக்குகளுக்காக உங்கள் உணர்ச்சிகளுடன் விளையாடுகிறார்கள்?
தலைவர் ஒரு அறம் சார்ந்த நபராக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கும் காலம் இருந்தது. இன்று நாட்டின் மிகப்பெரிய தலைவர் நெறிமுறைகளை கைவிட்டு மக்கள் முன்னிலையில் நாடகம் ஆடுகிறார்.
எங்கள் தலைவர்கள் சத்தியத்தின் பாதையில் நடப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்த காலம் இருந்தது, ஆனால் நாட்டின் மிகப்பெரிய தலைவர் தனது ஆற்றலையும் வலிமையையும் காட்ட நடக்கிறார், உண்மையின் பாதையில் நடக்கவில்லை.
கடமை மற்றும் சேவை உணர்வுடன் தான் ராமர் மக்கள் நலனுக்காக பாடுபட்டார், அதே சேவை உணர்வுடன் தான் மகாத்மா காந்தி மக்களுக்கு சேவையாற்றினார். நாட்டின் அனைத்து பிரதமர்களும், கட்சி வேறுபாடின்றி, கடமை உணர்வுடன், நாட்டிற்கு சேவை செய்வதில் மனசாட்சியுடன் இருந்தனர்.
தேர்தல்களின் போது அவர்கள் விலைவாசி அதிகரிப்பு பற்றியோ, உங்கள் கல்வி மற்றும் உங்கள் உடல்நலம் பற்றியோ பேசுவதில்லை, மாறாக ஆத்திரமூட்டும் பேச்சுகளையும், கவனத்தை சிதறடிக்கும் வகையில் பேச்சுகளையும் பேசுகிறார்கள்.
உங்கள் குடும்பம், உங்கள் குழந்தைகள் மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் அரசாங்கத்தை நீங்கள் ஆதரிக்க வேண்டும், உங்களை திசை திருப்பும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம்"
வெளிநாடுகளில் கூட நரேந்திர மோடிதான் இந்த நாட்டின் மிகப்பெரிய தலைவர் என்ற விவாதம் நடக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள். இந்த ஆடம்பரம், அதிகாரம், பெருமை மற்றும் ஆணவம் தான் உலகப் போர்களை ஒரு விரலால் தீர்க்க முடியும் என்று சொல்ல வைக்கிறது. நான் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன், இவ்வளவு அதிகாரம் இருந்தால் ஏன் 10 வருடங்களாக வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை, விலை வாசி ஏன் குறையவில்லை என்று ஏன் யாரேனும் அவரிடம் கேட்கவில்லை.
நாட்டின் அரசியல் சாசனத்தை மாற்றியமைக்க மோடி பெரும் பெரும்பான்மையை எதிர்பார்க்கிறார். பாஜக அல்லாத மாநிலங்களுக்கு எதிராக மோடி அரசு பாகுபாடு காட்டுகிறது, என்று பிரியங்கா காந்தி கூறினார்.
2023ஆம் ஆண்டு முதல் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்களின் வாழ்வில் சில மாற்றங்களை காங்கிரஸ் உத்தரவாதத் திட்டங்கள் கொண்டு வந்துள்ளன, மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ஏழைக் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்குவதாக பிரியங்கா காந்தி உறுதியளித்தார்.
Read in English: Priyanka Gandhi hits back at PM Modi: My mother’s mangalsutra was sacrificed for country
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“