2019ஆம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி வெள்ளிக்கிழமை (மார்ச் 25) பறிக்கப்பட்டது.
இந்த நிலையில் ட்விட்டரில் பிரியங்கா காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், 'நேரு குடும்பப்பெயரை ஏன் பயன்படுத்துவதில்லை என்று கேட்டு எனது முழு குடும்பத்தையும் காஷ்மீரி பண்டிட் சமூகத்தையும் அவமதித்தீர்கள். ஆனால் எந்த நீதிபதியும் உங்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கவில்லை, உங்களை பாராளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யவில்லை.
நீங்கள் உண்மையான தேசபக்தர். ஆனால், ராகுல் ஜி அதானியின் கொள்ளையை கேள்வி எழுப்பினார். நிரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்சி பற்றி கேள்வி எழுப்பினார்.
உங்கள் நண்பர் கெளதம் அதானி தனது கொள்ளையை கேள்விக்குட்படுத்தினார்.
இதை அறிந்து கொள்ளுங்கள். இந்திய ஜனநாயகத்திற்காக எனது குடும்பம் தியாகம் செய்து இரத்தம் சிந்தியுள்ளது, அதை நீங்கள் அழிக்க நினைக்கிறீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரியங்கா கூறுகையில், “இந்தக் குடும்பம் இந்திய மக்களின் குரலை உயர்த்தி, தலைமுறை தலைமுறையாக உண்மைக்காக போராடி வருகிறது.
நமது நரம்புகளில் ஓடும் இரத்தத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. உங்களைப் போன்ற கோழை, அதிகார வெறி கொண்ட சர்வாதிகாரியின் முன் நாங்கள் ஒருபோதும் பணிந்ததில்லை. உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை செய்யுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி மற்றும் லலித் மோடி போன்ற பொருளாதார குற்றவாளிகளைப் பற்றி குறிப்பிட்ட பிரியங்கா, அவர்கள் மீது பெரிய அளவிலான மோசடிகள் இருந்தபோதிலும், அவர்களுக்கு எதிரான விசாரணைகள் ஸ்தம்பித்தன.
நாட்டின் பணத்தை கொள்ளையடித்தவர்களை பாஜக ஏன் காப்பாற்றியது? எனக் கேள்வியெழுப்பினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/