காசா படுகொலைகள் குறித்து இந்தியாவின் மௌனம் 'வெட்கக்கேடு' - பிரியங்கா காந்தி கண்டனம்; இஸ்ரேல் தூதர் பதிலடி

“அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் 5 பத்திரிகையாளர்களின் படுகொலை, பாலஸ்தீன மண்ணில் நிகழ்த்தப்பட்ட மற்றொரு கொடூரமான குற்றம்” என்று எக்ஸ் தளத்தில் பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார்.

“அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் 5 பத்திரிகையாளர்களின் படுகொலை, பாலஸ்தீன மண்ணில் நிகழ்த்தப்பட்ட மற்றொரு கொடூரமான குற்றம்” என்று எக்ஸ் தளத்தில் பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Priyanka Gandhi

கடந்த காலங்களிலும் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வத்ரா, காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Photograph: (PTI Photo)

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, இஸ்ரேல் ராணுவத்தால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக இந்திய அரசின் "மௌனத்தையும், செயலற்ற தன்மையையும்" செவ்வாய்க்கிழமை கண்டித்தார். இதற்கு இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவென் அசார், பிரியங்கா காந்தியின் கூற்றை "வெட்கக்கேடான ஏமாற்று வேலை" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆங்கிலத்தில் அடிக்க:

Advertisment

காசாவில் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 60,000-ஐ எட்டியுள்ள நிலையில், பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பட்டினியால் வாடும் குழந்தைகளின் படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி, இஸ்ரேல் மீதான சர்வதேச விமர்சனங்களைத் தூண்டி வருகின்றன.

இன்று அதிகாலையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரியங்கா காந்தி, “இஸ்ரேல் அரசு இனப்படுகொலையை செய்து வருகிறது. அது 60,000-க்கும் மேற்பட்டவர்களை கொன்றுள்ளது, அவர்களில் 18,430 குழந்தைகளையும் கொலை செய்துள்ளது. நூற்றுக்கணக்கான மக்களை, அதில் பல குழந்தைகளையும், பட்டினி போட்டு கொன்றுள்ளது. மேலும், மில்லியன் கணக்கான மக்களை பட்டினி போட அச்சுறுத்துகிறது. இந்த குற்றங்களுக்கு மௌனமாகவும், செயலற்ற நிலையில் இருப்பதும் ஒரு குற்றமே.” என்று கூறியிருந்தார்.

“பாலஸ்தீன மக்களின் மீது இஸ்ரேல் இத்தகைய அழிவைக் கட்டவிழ்த்துவிடும்போது, இந்திய அரசு மௌனமாக இருப்பது வெட்கக்கேடானது” என்றும் பிரியங்கா காந்தி மேலும் கூறினார்.

Advertisment
Advertisements

அவரது கருத்துக்களுக்குக் கடுமையான பதிலடி கொடுத்த இஸ்ரேல் தூதர், பிரியங்கா காந்தியை "ஹமாஸின் புள்ளிவிவரங்களை நம்ப வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டார்.

அவரது பதிவை எக்ஸ் தளத்தில் மேற்கோள் காட்டி, அசார் எழுதினார்: “உங்கள் ஏமாற்று வேலைதான் வெட்கக்கேடானது. இஸ்ரேல் 25,000 ஹமாஸ் பயங்கரவாதிகளை கொன்றது. இந்த மனித உயிரிழப்புகளுக்கான பயங்கரமான செலவு, ஹமாஸின் கேவலமான தந்திரங்களான பொதுமக்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வது, வெளியேற அல்லது உதவி பெற முயலும் மக்களைச் சுடுவது, அவர்களது ராக்கெட் தாக்குதல்கள் ஆகியவற்றில் இருந்து வருகிறது. ஹமாஸ் உணவை பறிக்க முயன்றபோது, இஸ்ரேல் 2 மில்லியன் டன் உணவை காசாவிற்குள் செல்ல அனுமதித்தது. அதனால் தான் பட்டினி ஏற்பட்டது. கடந்த 50 ஆண்டுகளில் காசா மக்கள் தொகை 450% அதிகரித்துள்ளது, அங்கே இனப்படுகொலை நடக்கவில்லை. ஹமாஸின் புள்ளிவிவரங்களை நம்ப வேண்டாம்.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அல் ஜசீரா செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த குறைந்தபட்சம் 5 பத்திரிகையாளர்கள் காசா நகரத்தின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதை "கொலை" என்று குறிப்பிட்டு,  “உண்மைக்காக நிற்கத் துணிந்தவர்களின் அளவிட முடியாத துணிச்சலை, இஸ்ரேல் அரசின் வன்முறை மற்றும் வெறுப்பு ஒருபோதும் உடைக்காது” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் வலியுறுத்தினார்.

"அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் 5 பத்திரிகையாளர்களின் படுகொலை, பாலஸ்தீன மண்ணில் நிகழ்த்தப்பட்ட மற்றொரு கொடூரமான குற்றம்" என்று எக்ஸ் தளத்தில் பிரியங்கா காந்தி மற்றொரு பதிவில் எழுதினார்.

ஊடக நிறுவனத்தின் தகவலின்படி, அல் ஜசீரா பத்திரிகையாளர் அனாஸ் அல்-ஷரிப், மற்ற 4 சக பத்திரிகையாளர்களுடன் சேர்ந்து, காசா நகரில் பத்திரிக்கையாளர்கள் தங்கியிருந்த கூடாரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இஸ்ரேல் ராணுவம் பின்னர் இந்தத் தாக்குதலை ஒப்புக்கொண்டு, அல் ஜசீரா பத்திரிகையாளராக நடித்த ஹமாஸ் குழு தலைவரைக் கொன்றதாகக் கூறியது.

“ஊடகங்கள் பெரும்பாலும் அதிகாரத்திற்கும் வர்த்தகத்திற்கும் அடிமையாக இருக்கும் உலகில், இந்த துணிச்சலான ஆத்மாக்கள் உண்மையான பத்திரிகை என்றால் என்ன என்பதை நமக்கு நினைவூட்டினர். அவர்கள் ஆத்மா நிம்மதியாக இளைப்பாறட்டும்” என்று அவர் கூறினார்.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவிப்பது இது முதல் முறையல்ல. இந்த ஆண்டின் தொடக்கத்தில், இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளில் 400 அப்பாவி பொதுமக்கள், அதில் 130 குழந்தைகள் கொல்லப்பட்டபோது, இஸ்ரேல் மீதான சர்வதேச விமர்சனங்களில் அவரும் இணைந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் திங்கள்கிழமை, பத்திரிகையாளர்களின் கூடாரத்தை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், "அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் காசாவிற்குள் உடனடியாக, பாதுகாப்பான மற்றும் தடையற்ற அணுகலை" கோரியது.

இதை “சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்" என்று அழைத்த ஐ.நா. "அனைத்து பொதுமக்களையும், பத்திரிகையாளர்களையும் இஸ்ரேல் மதிக்கவும், பாதுகாக்கவும் வேண்டும். அக்டோபர் 7, 2023 முதல் காசாவில் குறைந்தது 242 பாலஸ்தீனிய பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்” என்று எழுதியது.

Priyanka Gandhi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: