Advertisment

உலகம் சுற்றும் மோடி விவசாயிகளை சந்திக்கமாட்டார்… பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்

வாரணாசியில் விவசாயிகளுக்கு நீதி கேட்டு நடந்த கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, “விவசாயிகள் தங்கள் வருமானம், நிலம் மற்றும் பயிர்கள் இந்த அரசின் கோடீஸ்வர நண்பர்களுக்கு செல்லும் என்பதை அறிந்ததால் போராட்டம் நடத்துகின்றனர்” என்று கூறினார்.

author-image
WebDesk
New Update
priyanka gandhi, lakhimpur kheri, pm narendra modi, farmers protest, uttar pradesh, பிரியங்கா காந்தி, லக்கிம்பூர் கேரி, விவசாயிகள் போராட்டம், பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேசம், priyanka gandhi criticise pm modi, yogi adityanath

வாரணாசியில் நடந்த ‘கிசான் நியாய்’ எனப்படும் விவசாயிகளுக்கு நீதி கேட்டு நடந்த கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, “விவசாயிகள் தங்கள் வருமானம், நிலம், பயிர்கள் இந்த அரசாங்கத்தின் கோடீஸ்வர நண்பர்களுக்கு செல்லும் என்பதை அறிந்ததால் போராட்டம் நடத்துகின்றனர்” என்று கூறினார்.

Advertisment

லக்கிம்பூர் கேரியில் நடந்த மரணம் தொடர்பாக பாஜக அரசு மீது கடுமையாக தாக்குதலைத் தொடங்கிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷை அரசாங்கம் பாதுகாக்கிறது என்றும், விவசாயிகளால் மத்திய அரசு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மத்திய அரசு ஒருபோதும் செவிசாய்க்கவில்லை என்றும் கூறினார்.

வாரணாசியில் நடந்த ‘கிசான் நியாய்’ பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, “கடந்த வாரம், மத்திய அமைச்சரின் மகன் தனது வாகனத்தில் ஆறு விவசாயிகளை படுகொலை செய்தார். பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பங்களும் தங்களுக்கு நீதி வேண்டும் என்று கூறினார்கள். ஆனால், நீங்கள் அரசாங்கம் அமைச்சரையும் அவரது மகனையும் பாதுகாப்பதை நீங்கள் அனைவரும் பார்த்தீர்கள் இல்லையா? 6 பேரை கொன்ற ஒருவரை அவர்களுடன் பேசுவதற்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியதை நீங்கள் எந்த நாட்டிலாவது பார்த்திருக்கிறீர்களா?” என்று கூறினார்.

பொது மன்றத்தில் இருந்து அமைச்சரை முதல்வர் பாதுகாத்து வருகிறார். உத்தர பிரதேசம் மற்றும் ஆசாதி கா அமிர்த மஹோத்ஸவ் நிகழ்ச்சிகளைப் பார்க்க பிரதமர் லக்னோவுக்கு வந்தார். ஆனால், அவரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள லக்கிம்பூர் கேரிக்குச் செல்ல முடியவில்லை.

லக்கிம்பூர் கேரி சம்பவத்தில் கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஆஷிஷ் மிஸ்ரா விசாரணைக்குப் பிறகு சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேச மாநில சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தலைமை வகிக்கும் டிஐஜி உபேந்திர குமார் அகர்வால் இரவு 11 மணி அளவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அவர் ஒத்துழைக்கவில்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம். அவர் சில விஷயங்களைச் சொல்லவில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதோடு தவிர்க்கும் பதில்களின் அடிப்படையில், நாங்கள் ஆஷிஷை காவலில் எடுத்துள்ளோம். அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். நாங்கள் தொடர்ச்சியாக அவரை காவலில் விசாரணை செய்வோம்.” என்று கூறினார்.

விவசாயிகள் பிரச்சனையில் பிரதமர் மோடியை மேலும் விமர்சிக்க முற்பட்ட பிரியங்கா, விவசாயிகளின் போராட்டங்களுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றும், அவர்களின் கோரிக்கைகளை தீவிரமாக கேட்க முயற்சிக்கவில்லை என்றும் கூறினார்.

“300 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த சமயத்தில் அவர்களில் 600 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அவர்களின் வருமானம், நிலம், பயிர்கள் இந்த அரசாங்கத்தின் கோடீஸ்வர நண்பர்களுக்கு செல்லும் என்பதை அவர்கள் அறிந்திருப்பதால்தான் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பிரதமர் மோடி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார். ஆனால், விவசாயிகளை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை” என்று அவர் கூறினார்.

“பிரதமர் மோடி போராட்டக்காரர்களை ‘அந்தோலஞ்ஜீவி’ மற்றும் பயங்கரவாதிகள் என்று அழைத்தார். யோகி ஆதித்யநாத் அவர்களை குண்டர்கள் என்று கூறி அவர்களை அச்சுறுத்த முயன்றார். அதே அமைச்சர் (அஜய் மிஸ்ரா) இரண்டு நிமிடங்களுக்குள் போராடும் விவசாயிகளை வரிசையில் நிற்க வைப்பதாக கூறியிருந்தார்” என்று அவர் கூறினார்.

ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், பொதுமக்கள் பிரியங்காவை தரையை மட்டும் சுத்தம் செய்யத் தகுதியானவர் என்று விட்டுவிட்டதாகக் கூறியிருந்தார்.

பிரியங்கா பின்னர் ஒரு தலித் காலனியில் உள்ள வால்மீகி கோயிலை அடைந்து அதன் வளாகத்தை துடைப்பத்தால் சுத்தம் செய்தார். ஆதித்யநாத்தின் கருத்து தனக்கு எதிரானதல்ல, கோடிக்கணக்கான பெண்கள், தலித்துகள் மற்றும் சஃபாய் கரம்சாரிகள், அவர்கள் பெருமையுடன் வீடுகள் மற்றும் நகரங்களை தூய்மையாக வைத்திருக்கிறார்கள்.

துப்புரவு மற்றும் சுகாதாரப் பணியில் ஈடுபடுபவர்களை முதல்வர் அவமானப்படுத்தியதாக பிரியங்கா கூறினார். லூவ் குஷ் நகரில் உள்ள மக்களிடம் அவர் கூறுகையில், “அவர் அவ்வாறு கூறி என்னை அவமானப்படுத்தவில்லை, கோடிக்கணக்கான தலித் சகோதர சகோதரிகள் சஃபாய் கரம்சாரிகள் என்பதால் அவர் உங்கள் அனைவரையும் அவமானப்படுத்தியிருக்கிறார்.” என்று கூறினார்.

அதனால்தான், பிரியங்கா, அந்த வேலையைச் செய்வதில் தவறில்லை என்று காட்ட வால்மீகி கோயிலை தனிப்பட்ட முறையில் சுத்தம் செய்ய முடிவு செய்தேன் என்று கூறினார்.

‘கிசான் நியாய்’ கூட்டத்தில் கடந்த திங்கட்கிழமை உபி காவல்துறையால் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர், லக்கிம்பூர் கேரியில் இறந்த நான்கு விவசாயிகளின் உறவினர்களைச் சந்திக்கச் சென்றபோது, ​​அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்கு மட்டுமே வேலை செய்கிறது என்று கூறினார்.

கடந்த ஆண்டு மோடி தனக்கு இரண்டு விமானங்களை ரூ.16,000 கோடிக்கு வாங்கினார். அவர் இந்த நாட்டின் ஏர் இந்தியாவை வெறும் 18,000 கோடி ரூபாய்க்கு இந்த கோடீஸ்வர நண்பர்களுக்கு விற்றார். இன்று இந்த நாட்டில் இரண்டு வகையான மக்கள் மட்டுமே பாதுகாப்பாக உள்ளனர். ஒன்று ஆட்சியில் இருக்கும் பாஜக தலைவர்கள் இரண்டு அவர்களின் கோடீஸ்வர நண்பர்கள்” என்று அவர் கூறினார்.

மக்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, “உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: உங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா? வளர்ச்சி உங்கள் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டதா? இல்லையென்றால், நீங்கள் என்னுடன் நின்று இப்போது மாற்றத்தைக் கொண்டுவர வேண்டிய நேரம் இது என்று சொல்லலாம்.” என்று கூறினார்.

முன்னதாக, லக்கிம்பூர் கேரி சம்பவத்தின் உண்மைகள் குறித்த விரிவான குறிப்பை வழங்குவதற்காக, ராகுல் காந்தி தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பதற்கு நேரம் கேட்டு காங்கிரஸ் கட்சி ட்வீட் செய்திருந்தது. இருப்பினும், சில நிமிடங்களுக்குப் பிறகு, அந்த ட்வீட் காங்கிரஸ் கட்சியால் நீக்கப்பட்டது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Narendra Modi Uttar Pradesh Priyanka Gandhi Farmers Protest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment