scorecardresearch

ராஜ்காட்டில் குவிந்த காங்கிரஸ் தலைவர்கள்.. போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு

ராகுல் காந்தியின் மக்களவை எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள்ராஜ்காட்டில் உண்ணாவிரத போராட்டத்தில் குவிந்து வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.

Priyanka Gandhi Mallikarjun Kharge reach Rajghat as Delhi Police denies permission for sit-in
சத்யாகிரக போராட்டத்தில் கலந்துகொள்ள ராஜ்காட் வந்த பிரியங்கா காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீதான 2019ஆம் ஆண்டு அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் வயநாடு மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள் நாடு முழுக்க இன்று (மார்ச் 26) சத்யாகிரக போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதையடுத்து டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் தலைவர்கள் கூடிவருகின்றனர். இங்குள்ள காந்தி நினைவிடத்தில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள உள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் போராட்ட இடத்துக்கு வந்துவிட்டனர். எனினும் சத்யாகிரக போராட்டம் நடத்த டெல்லி போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் வேறு எந்த போராட்டமும் நடைபெறுவதை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Priyanka gandhi mallikarjun kharge reach rajghat as delhi police denies permission for sit in