கேரளத்தில் இருந்து தேர்வான ஒரே ஒரு பெண் எம்.பி… பெருமைப்படும் ப்ரியங்கா காந்தி!

ஆலத்தூர் முன்னாள் எம்.பி. பி.கே. பிஜூவை விட சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ரம்யா ஹரிதாஸ்

By: Updated: June 7, 2019, 10:19:47 AM

Priyanka Gandhi Shares Alathur MP Ramya Haridas Video : நடைபெற்று முடிந்த மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிகள் தமிழகம், கேரளா போன்ற தென்மாநிலங்களில் மாபெரும் வெற்றியைக் கண்டன. தமிழகத்தில் 10 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரே ஒரு பெண் வேட்பாளாரை மட்டுமே களம் இறக்கியது.

ஜோதிமணி கரூரில் முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை எதிர்த்து போட்டியிட்டார். மாபெரும் வெற்றியை பதிவு செய்து அவர் நாடாளுமன்றம் சென்றுள்ளார். தமிழகத்தில் இருந்து மூன்று பெண் எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.

கேரளத்தில் உள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளை காங்கிரஸ் வென்றது. ஒரே ஒரு தொகுதியை இடதுசாரி கட்சிகள் வென்றது. அந்த 19 தொகுதிகளில் இருந்து நாடாளுமன்றம் செல்லும் ஒரே ஒரு பெண் நாடாளும்னற உறுப்பினர் ரம்யா ஹரிதாஸ் ஆவார்.

‘ஆலத்தூர் பெண்களுட்டி’ என்று கேரள மக்களால் செல்லமாக அழைக்கப்படும் ரம்யா ஹரிதாஸ் ஒரு கூலி வேலை பார்க்கும் ஒருவரின் மகள் ஆவார். தன்னுடைய வாழ்வினை ஒரு என்.ஜி.ஓவில் வெறும் 600 ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்தவர். பின்னாளில் (2011) ரம்யா ஹரிதாஸ் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். பின்னர் இளைஞர் காங்கிரஸின் தலைவராக சமூக பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார்.

Priyanka Gandhi Shares Alathur MP Ramya Haridas Video

இம்முறை தேர்தலில் அவருக்கு புதிய வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் கண்டுள்ளார் ரம்யா. இவரின் வாழ்க்கையை சித்தகரிக்கும் சிறு வீடியோ குறிப்பு ஒன்றை தன்னுடைய முகநூலில் பகிர்ந்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி.

நாட்டுப்புற பாடல்கள் பாடி வாக்கு சேகரிப்பதில் பெயர் பெற்றவர் ரம்யா. ஆனால் அவர் குறித்து பாலியல் ரீதியான விமர்சனங்களை இடது சாரிகள் முன் வைத்தனர். இவை அனைத்தையும் கடந்து 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து இடதுசாரி சார்பில் போட்டியிட்டவர் இரண்டு முறை அந்த தொகுதியில் எம்.பியாக இருந்த பி.கே. பிஜூ என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவி: சோனியா காந்தி மீண்டும் தேர்வு

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the India News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Priyanka gandhi shares alathur mp ramya haridas video and prouds of the only one young woman mp from kerala

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X