Priyanka Gandhi Vadra insulted Lal Bahadur Shastri says Smiriti Irani : காங்கிரஸ் கட்சித் தலைவர் மற்றும் உத்திரப்பிரதேசம் கிழக்குப் பகுதியின் தேர்தல் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.
உத்திரப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பிரியங்கா காந்தி. நேற்று அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டவர், முன்னால் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்தார்.
இதில் என்ன பிரச்சனை என்றால், ஏற்கனவே லால் பகதூர் சாஸ்திரி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. பிரியங்கா காந்தியை வரவேற்று அவருக்கு அணிவிக்கப்பட்டிருந்த மாலையை கழற்ற்,, லால் பகதூர் சாஸ்திரிக்கு அணிவித்திருக்கிறார் பிரியங்கா காந்தி.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சராக பதவி வகிக்கும் ஸ்ம்ரிதி இராணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிரியங்கா காந்தியை கேள்விகளால் துளைத்துள்ளார்.
ட்விட்டரில் கொதித்தெழுந்த ஸ்மிரிதி இரானி
மேலும், “பிரியங்கா காந்தி வந்தார், ஏற்கனவே உபயோகப்படுத்திய மாலையை சிலைக்கு அணிவித்தார், மக்களைப் பார்த்து கையசைத்துவிட்டு, லால் பகதூர் சாஸ்திரியை அவமானப்படுத்திவிட்டு கிளம்பிவிட்டார்” என்று ட்வீட் செய்துள்ளார்.
அதில் காங்கிரஸாரின் உண்மையான முகம் இது தான் என்று புகாராக கருத்து தெரிவித்துள்ளார்.
உ.பி.யில், மோடியின் தொகுதியான வாரணாசியில் மூன்று நாள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பிரியங்கா காந்தி. வருகின்ற தேர்தல் களம், மீண்டும் ஒரு சுதந்திரத்திற்கான போராட்டம் என்று அவர் கூறியுள்ளார்.