‘கழுத்தைப் பிடித்து போலீசார் என்னைத் தள்ளினர்’: பிரியங்கா புகார்

நான் வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டேன். இருந்தாலும் நான் உறுதியாக இருந்தேன். போலிஸ் ஒடுக்குமுறையை எதிர்கொண்ட ஒவ்வொரு குடிமகனுடனும் நான் நிற்கிறேன்.

By: Updated: December 29, 2019, 12:17:12 PM

லக்னோவில் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி  எஸ்.ஆர் தாரபுரி, குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தினால் கைது செய்யப்பட்டார். அவரின் குடும்பத்தாரை சந்தித்து தைரியம் கூறுவதற்காக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா சனிக்கிழமை அவரின் இல்லத்திற்கு செல்லும் வழியில், உத்தரபிரதேச காவல்துறையினர் கழுத்தை பிடித்து தள்ளி அவரை கையாண்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

தனது அனுபவத்தை விவரிக்கும் பிரியங்கா காந்தி, இந்திராநகரின் பிரிவு 18 இல் உள்ள எஸ்.ஆர்.தராபுரியின் இல்லத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த வேளையில், தன்னை தடுக்கும் முயற்சியில் காவல்துறையினர் சூழ்ந்தனர்.

 

நான் ஏன் என்று  அவர்களிடம் கேட்டேன். இதற்கு, நாங்கள் மேற்கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று பதிலாய் கூறப்பட்டது…. என்று பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் கூறினார்.

அதன்பிறகு ஏற்பட்ட நிகழ்வுகளில், பிரியங்கா காந்தி ஐபிஎஸ் அதிகாரியின் வீட்டிற்கு  தனது வாகனத்தில் இருந்து இறங்கி நடக்கத் தொடங்கினார். மீண்டும், காவல் துரையினரும் பிரியங்கா காந்தியை பின் தொடர்ந்தனர் என்று உத்தரபிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அசோக் சிங் பி.டி.ஐ என்ற செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்தார்.

 

ஏறக்குறைய ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றபின், பிரியங்கா காந்தி மீண்டும் தனது வாகனத்தில் பயணித்தார்.  மாநில தலைநகரில் உள்ள முன்ஷிபூலியா பகுதியில் காவல்துறையினர் மீண்டும் அவரைத் தடுக்க முயன்றனர்.

இதனால், நான் வாகனத்திலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தேன். நான் காவல் துறையினரால் சூழ்ந்திருந்தேன், ஒரு பெண் போலீஸ் அதிகாரி எனது தொண்டையை அழுத்தி எனது பயணத்தை நிறுத்தினர், மற்றொரு பெண் போலீஸார் என்னை பின்னாடி இருந்து தள்ளியதும் நான் கீழே விழுந்தேன். விழுந்தவுடன் ஒரு பெண் அதிகாரி, எனது கழுத்தை பிடித்து  என்னை தூக்கினார். நான் வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டேன். இருந்தாலும் நான் உறுதியாக இருந்தேன். போலிஸ் ஒடுக்குமுறையை எதிர்கொண்ட ஒவ்வொரு குடிமகனுடனும் நான் நிற்கிறேன். இது எனது ‘சத்தியாக்கிரகம்’ என்று பிரியங்கா மேற்கோளிட்டுள்ளார்.

 

காவல்துறையின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பிரியங்கா, ஒரு போலிஸ் அதிகாரியிடம் ஏன் ஒரு நகரன் மையப்பகுதியில்  என்னைத் தடுத்து நிறுத்துகின்றீர்கள் எனக் கேட்டார்.

“பாஜக அரசு கோழைத்தனமாக செயல்படுகிறது. நான் (கிழக்கு) உத்தரபிரதேச காங்கிரஸின் பொறுப்பாளராக இருக்கிறேன், நான் மாநிலத்தில் எங்கு செல்வேன் என்பதை அரசாங்கம் முடிவு செய்யப்போவதில்லை, ”என்றும் அவர் கூறினார்.

 

காவல்துறையினருடன் ஏற்பட்ட  போராட்டங்களுக்குப் பிறகு , பிரியங்கா தாராபுரியின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தார். “நான் அமைதியான முறையில் சென்று கொண்டிருந்தேன், சட்டம் ஒழுங்கு சூழ்நிலை எவ்வாறு மோசமடையப் போகிறது? இந்த வருகையைப்  பற்றி நான் யாரிடமும் சொல்லவில்லை (வருகை), என்னுடன் மூன்று நான்கு நபர்கள் கூட இல்லை . என்னைத் தடுக்க அவர்களுக்கு உரிமை இல்லை. அவர்கள் என்னைக் கைது செய்ய விரும்பினால், அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டும்.” என்று குடும்பத்தை சச்ந்தித்து விட்டு பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உங்கள் நடவடிக்கையால், தங்களது அரசியல் ஆபத்தில் இருப்பதாக அரசாங்கம் உணர்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ‘இங்கு அன்றாட அரசியலை கூட ஆபத்தாக  மாற்றியுள்ளனர்’ என்றார்.

இதற்கிடையில், இன்று காலையில் காவல்துறை அதிகாரி அர்ச்சனா சிங், உத்தர் பிரதேச கூடுதல் கண்காணிப்பாளரிடம்  சமர்பித்த அறிக்கையில், பிரியங்காவின் கார் திட்டமிடப்பட்ட பாதையில் செல்லாமல், வேறு வழியில் சென்றது என்று கூறியிருந்தார் . சமூக ஊடகங்களில் வரும் பிரியங்கா காந்தியின் கழுத்தை நெரித்தல் பற்றிய வதந்திகள் தவறானவை என்றும் அதிலக் கூறப்பட்டுள்ளது.

உ.பி. காவல்துறையின் செயலுக்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ், காங்கிரஸ் தலைவர் பிரிவு 144 ஐ மீறவில்லை, இருப்பினும்  அவர் மீது காவல்துறையினர் அத்துமீறியுள்ளது, முழுமையான கூண்டா ராஜ் உள்ளது, மாநிலத்தில் ஜனாதிபதியின் ஆட்சி அமல்படுத்த வேண்டும் ” என்று குற்றம் சாட்டினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Priyanka gandhi vadra saturday alleged that uttar pradesh cops manhandled her

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X