How To Download Duplicate Aadhaar Card Online: ஆதார் எண், இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய மற்றும் அத்தியாவசிய ஆவணமாக மாறியுள்ளது. ஆதார் எண், இருப்பிடத்திற்கான ஆவணமாகவும், வயதுச்சான்றுக்கான ஆவணமாகவும், நம்முடைய அடையாள ஆவணமாகவும் விளங்குவதால், அதை நாம் எப்போதும் கையிலேயே வைத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, ஆதார் அட்டை தொலைந்து போகும் வாய்ப்பு அல்லது சேதமடைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆதார் அட்டை தொலைந்து போனாலோ அல்லது சேதமடைந்தாலோ, நாம் டூப்ளிகேட் ஆதார் அட்டையை எளிதாக பெற இயலும். ஆன்லைனில் மட்டுமின்றி ஆப்லைனிலும், நாம் டூப்ளிகேட் ஆதார் அட்டையை பெறமுடியும்.
UIDAI இணையதளத்தின் மூலமாகவே, நாம் ஆன்லைன் முறையில் டூப்ளிகேட் ஆதார் அட்டையை விண்ணப்பித்து பெறமுடியும். ஆப்லைனில் பெற வேண்டும் என்றால், அருகில் ஆதார் சேவை மையத்திற்கு சென்று அதிலிருக்கும் நடைமுறைகளை மேற்கொண்டு நாம் டூப்ளிகேட் ஆதார் அட்டையை பெறலாம்.
1. UIDAI இணையதளத்திற்கு செல்லவும்
2. அதில் ‘Download Aadhaar’.பகுதிக்கு செல்லவும்
3. ஆதார் எண் இருந்தால், அதற்குரிய ஆப்சனை தேர்ந்தெடுத்து 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளீடவும். ஆதார் எண் இல்லாமல், அதற்கு முந்தைய பதிவு எண் (enrolment number) மட்டும் இருந்தால், அதற்குரிய ஆப்சனில் 14 இலக்க பதிவு எண்ணை நிரப்பவும்.
4. கப்சா குறியீடை சரியாக பதிவிட்டு, OTP பெறுவதற்காக OTP பட்டனை அழுத்தவும்.
5. ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதனை இங்கே பதிவிட்டு, நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை ஏற்றுக்கொண்ட பின், சப்மிட் பட்டனை அழுத்தவும்.
6. OTP பதிவிட்டவுடன், உங்கள் ஆதார் தகவல்கள் திரையில் தெரியும்.
7. அந்த விபரங்களை சரிபார்த்தபின், payment optionயை தேர்ந்தெடுக்கவும். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் உள்ளிட்ட ஏதாவது ஒன்றின் மூலம் அதற்குரிய பணத்தை செலுத்தவும். டூப்ளிகேட் ஆதார் கார்டு, நீ்ங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு விரைவு தபாலில் வந்து சேரும்.
ஆதார் எண் மறந்துவிட்டது அல்லது அந்த அக்னாலஜ்மென்ட் சிலிப்பும் தொலைந்துவிட்டது. டூப்ளிகேட் ஆதார் கார்டு பெற முடியுமா என்றால், முடியும்…அதற்கான வழிமுறை
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்த மொபைல் எண் / இமெயில் ஐடி உள்ளிட்டவைகள் இதற்கு மிகமுக்கியம்.
1. UIDAI இணையதளத்திற்கு செல்லவும்.
2. அதில், Locate ‘Retrieve lost UID (Aadhaar number) or EID (enrolment number) என்பதை தெரிவுசெய்யவும்.
3. அதில் கேட்கப்பட்டுள்ள பெயர், இமெயில் ஐடி, மொபைல் எண் உள்ளிட்டவற்றை நிரப்பவும்.
4. ஆதார் எண் மீட்கப்பட வேண்டுமா அல்லது பதிவு எண் தெரிந்துகொள்ளணுமா என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்.
5. Send OTP பட்டனை அழுத்தவும். சரிபார்ப்பிற்கு OTP எண்ணை பதிவிடவும்
6. ஆதார் எண் மீட்கப்பட வேண்டுமென்றால், உங்கள் மொபைல் எண் அல்லது இமெயில் ஐடி பதிவு செய்திருப்பது கட்டாயம்.
7. பின், ஆதார் எண் அல்லது பதிவு எண்ணை கொண்டு, டூப்ளிகேட் ஆதார் அட்டையை பெறலாம்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Procedure to get duplicate aadhaar number