Production and stocks of wheat have fallen in India: Atta prices at record high
அனைத்திந்திய அளவில் கோதுமை மாவின் மாதாந்திர சராசரி சில்லறை விலை, ஏப்ரல் மாதத்தில் ஒரு கிலோ ரூ. 32.38 ஆக இருந்தது, இது 2010 ஜனவரிக்குப் பிறகு அதிகபட்சமாகும்.
Advertisment
இந்தியாவில் கோதுமை உற்பத்தி மற்றும் கையிருப்பு இரண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதால் கோதுமை விலை உயர்ந்து வருகிறது, மேலும் நாட்டிற்கு வெளியே தேவை அதிகரித்து வருகிறது.
மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்திற்கு மாநில சிவில் சப்ளைஸ் துறைகள் அளித்த தரவின் படி, கோதுமை மாவின் அகில இந்திய சராசரி சில்லறை விலை சனிக்கிழமையன்று (மே.7) கிலோ ரூ.32.78 ஆக இருந்தது. இது ஒரு வருடத்திற்கு முந்தைய விலையை விட (கிலோ ரூ.30.03) 9.15 சதவீதம் அதிகம்.
நான்கு பெருநகரங்களில், சராசரி கோதுமை மாவின் சில்லறை விலை மும்பையில் கிலோ ரூ.49க்கு அதிகமாக இருந்தது, அதைத் தொடர்ந்து சென்னை (ரூ. 34/கிலோ), கொல்கத்தா (ரூ. 29/கிலோ) மற்றும் டெல்லி (ரூ. 27/கிலோ) ஆகிய இடங்களில் உள்ளது.
Advertisment
Advertisements
கோதுமை மாவின் அகில இந்திய சராசரி தினசரி சில்லறை விலை காலண்டர் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அதிகரித்து வருகிறது. ஜனவரி 1 முதல் 5.81 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தரவு காட்டுகிறது. ஏப்ரல் 2021 இல் பதிவு செய்யப்பட்ட சராசரி சில்லறை விலை கிலோ ரூ.31 ஆக இருந்தது.
உற்பத்தி வீழ்ச்சி மற்றும் உக்ரைன் போர் காரணமாக இந்திய கோதுமைக்கான அதிக வெளிநாட்டு தேவை காரணமாக, கோதுமை விலை உயர்ந்து வருவதே மாவு விலையில் நிலையான அதிகரிப்புக்கு காரணம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. உள்நாட்டில் டீசலின் விலை உயர்வு கோதுமை மற்றும் மாவு ஆகிய இரண்டின் தளவாடச் செலவைக் கூட்டியுள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில், PDS அல்லாத ‘கோதுமையின் சில்லறை பணவீக்கம் மார்ச் 2022 இல் 7.77 சதவீதத்தை எட்டியது. இது மார்ச் 2017க்குப் பிறகு (7.62 சதவீதம்) அதிகபட்சம்.
கோதுமை மாவுடன், பேக்கரி ரொட்டியின் விலையும் கடந்த சில மாதங்களில் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பேக்கரி ரொட்டிக்கான சில்லறை பணவீக்கம் 8.39 சதவீதமாக இருந்தது. இது ஜனவரி 2015இல் இருந்ததை விட அதிகம்.
கோதுமை உற்பத்தி வீழ்ச்சியை நாடு சந்திக்கும் நேரத்தில் மாவு மற்றும் ரொட்டியின் விலைகள் உயர்ந்து வருகின்றன. 2021-22 ஆம் ஆண்டில் 110 மில்லியன் டன் கோதுமை உற்பத்தி இலக்கை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது, இது 2020-21 இல் மதிப்பிடப்பட்ட 109.59 மில்லியன் டன் உற்பத்தியை விட அதிகமாகும்.
உண்மையில், இந்த ஆண்டு பிப்ரவரி 16 அன்று வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்ட 2வது அட்வான்ஸ் எஸ்டிமேட் படி, 2021-22 ஆம் ஆண்டிற்கான மொத்த கோதுமை உற்பத்தி 111.32 மில்லியன் டன்களாக இருக்கும்.
எவ்வாறாயினும், மார்ச் மாதத்தில் வெப்பநிலையின் திடீர் அதிகரிப்பு, சாதனை உற்பத்திக்கான அரசாங்கத்தின் நம்பிக்கையைத் தகர்த்தது. 2021-22 ஆம் ஆண்டிற்கான மொத்த கோதுமை உற்பத்தி இலக்கை விட குறைவாக இருக்கலாம் என்று அதிகாரிகள் இப்போது கூறுகின்றனர்.
உற்பத்தி வீழ்ச்சி மற்றும் தனியார் வியாபாரிகளின் அதிக தேவை காரணமாக, வெளிச்சந்தையில் கோதுமை விலை, நடப்பு ரபி பருவத்தில் அரசு அறிவித்த குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,015 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலையை விட அதிகமாக உள்ளது.
உணவு அமைச்சகத்தின் மதிப்பீட்டின்படி, நடப்பு ரபி சந்தைப்படுத்தல் பருவத்தில் கோதுமை கொள்முதல் 195 லட்சம் டன்களாக இருக்கும், இது அரசாங்கத்தின் ஆரம்ப கொள்முதல் இலக்கான 444 லட்சம் டன்களையும், கடந்த ஆண்டு உண்மையான கொள்முதல் 433 லட்சம் டன்களையும் விட கணிசமாகக் குறைவு. எஃப்சிஐ போர்ட்டலில் கிடைத்த தகவலின்படி, ஏப்ரல் 28 வரை 156.92 லட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
40 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் மாதத்தில் 11 லட்சம் டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் உணவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியா கடந்த ஆண்டு (2021-22) சுமார் 70 லட்சம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளது.
இதனிடையே பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தின் கீழ் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான கோதுமை ஒதுக்கீட்டை செப்டம்பர் வரை குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
திருத்தப்பட்ட ஒதுக்கீட்டின்படி, பீகார், கேரளா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் இலவச உணவு திட்டத்தின் கீழ் எந்த கோதுமையையும் பெறாது. தவிர, டெல்லி, குஜராத், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய எட்டு மாநிலங்களின் கோதுமை ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான கோதுமை ஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் இல்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“