Bashaarat Masood
Prominent faces detained in Kashmir : 5ம் தேதியில் இருந்து ஜம்முவில் ஊரடங்கு உத்தரவு நிலவி வருகிறது. ஆகஸ்ட் நான்காம் தேதி நள்ளிரவில் இருந்து முன்னாள் முதல்வர்கள் மட்டுமல்லாமல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள், ஏழு மாநில அமைச்சர்க்கள், மேயர், துணை மேயர் மற்றும் எம்.எல்.ஏக்கள் என அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Prominent faces detained in Kashmir
ஆகஸ்ட் 5ம் தேதி நாடாளுமன்ற மக்கள் அவையில் ஜம்மு- காஷ்மீர் மறுசீராய்வு மசோதாவை தாக்கல் செய்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. இந்த மசோதா தாக்கல் செய்யும் போது தேவையற்ற பிரச்சனைகள் ஏதும் ஏற்பட வேண்டாம் என தொலைத் தொடர்பு, இணைய சேவைகள் என அனைத்தும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டன. இன்று வரை கைது செய்யப்பட்ட முக்கிய நபர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்படவில்லை.
வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், பேராசிரியர்கள், ஜம்மு – காஷ்மீர் பார் அசோசியேசன் மற்றும் சிவில் சொசைட்டி உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க : இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
ஃபரூக் அப்துல்லா : மூன்று முறை ஜம்மு – காஷ்மீர் முதல்வராக இருந்துள்ளார். மத்திய அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார். தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக இருக்கும் அவர், தற்போதைய ஸ்ரீநகர் தொகுதியின் எம்.பி. ஆவார்.
மெகபூபா முஃப்தி : பீப்பிள் டெமாக்ரடிக் பார்ட்டியின் தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்
ஒமர் அப்துல்லா : அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியின் போது, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சராக செயல்பட்டார் ஒமர் அப்துல்லா. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஜம்மு – காஷ்மீர் முதல்வர்
சாஜத் லான் : பீப்பிள்ஸ் கான்ஃபிரன்ஸ் கட்சியின் தலைவர். பாஜகவுக்கு மிக நெருக்கமான நபர். பிரதமர் மோடியை தன் சகோதரன் என்று கூறியவர். ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெற்ற போது, அம்மாநில பாஜக முதல்வர் வேட்பாளர் என்றும் அழைக்கப்பட்டவர். தனிநாடு வேண்டும் என்று போராடி பிறகு அரசியல்வாதியாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர்.
ஜூனாய்ட் மட்டு (Junaid Mattu) : ஸ்ரீநகரின் மேயர். அம்மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக்கினால், காஷ்மீர் அரசியலில் களம் இறங்கிய புது நம்பிக்கை என்ற பாராட்டை பெற்றவர். சமீபத்தில் எலும்பு மஜ்ஜையில் நோய் தொற்றினால் அவதியுற்று வருகிறார்.
ஷா ஃபைசல் : ஐ.ஏ.எஸ் அதிகாரியாக செயல்பட்டு பின்னர் மக்கள் இயக்கம் ஒன்றை துவங்கியுள்ளவர். ஜம்மு காஷ்மீர் பீப்பிள்ஸ் மூமெண்ட் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
வஹீத் பர்ரா : பீப்பிள்ஸ் டெமாக்கிரட்டிக் பார்ட்டியின் இளைஞரணி செயலாளர் இவர்.
குலாம் அகமது மிர் : பிரதேஷ் காங்கிரஸ் என்ற கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
சைஃபுதீன் சோஸ் : பிரதேஷ் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ் ஆட்சியின் போது அமைச்சராக செயல்பட்டார்.
நயீம் அக்தர் : பிடிபி – பாஜக கூட்டணி ஆட்சியின் போது அமைச்சராக செயல்பட்டார். மெகபூபா முஃதியின் நம்பத் தகுந்த வட்டாரங்களில் மிக முக்கியமானவர் இவர்.
அலி முகமது சாகர் : முன்னாள் மத்திய இணை அமைச்சர், தேசிய மாநாட்டுக் கட்சியின் பொதுச் செயலாளர். நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அப்துல் ரஹீம் ரத்தேர் : துணை நிதி அமைச்சராக செயல்பட்ட அவர் 7 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முகமது சஃபி : உரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பல்வேறு முறை தேர்வு செய்யப்பட்ட இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.
குலாம் ஹசன் மிர் : முன்னாள் மாநில அமைச்சர். பி.டி.பி. கட்சியின் உருவாக்கத்திற்கு முக்கிய பங்களிப்பினை அவர் அளித்துள்ளார்.
ஹக்கிம் யாசின் : ஜம்மு காஷ்மீர் பீப்பிள்ஸ் டெமாக்ரடிக் ஃப்ரண்ட் என்ற கட்சியை துவங்கி நடத்தி வரும் அவர் மூன்று முறை சுயேட்சை வேட்பாளராக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
எம்.ஒய். டரிகமி : இடதுசாரி கட்சியை சேர்ந்தவர். சி.பி.எம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர். நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இம்ரான் அன்சாரி : பிடிபி – பாஜக கூட்டணி ஆட்சியில் அமைச்சராக செயல்பட்டார். சியா தலைவரான இவர்,சாஜத் லோனின் நண்பர். கடந்த ஆண்டு பீப்பிள்ஸ் கான்ஃபிரன்ஸில் இணைந்தார்.
முபாரக் குல் : எடிகா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 4 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கலிதா ஷா : ஃபரூக் அப்துல்லாவின் சகோதரி மற்றும் முன்னாள் ஜம்மு – காஷ்மீர் மாநில முதல்வர் குலாம் முகமது ஷாவின் மனைவி. அவாமி தேசிய மாநாட்டு கட்சியின் முக்கிய தலைவர்.
முகமது அஷ்ரஃப் மிர் : பாஜக – பிடிபி கூட்டணியில் மிக முக்கிய அமைச்சர். 2014ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஒமர் அப்துல்லாவை தோற்கடித்தவர்.
அஜாஸ் மிர் : தெற்கு காஷ்மீரின் சோபியான் பகுதியில் இருக்கும் வாச்சி பகுதியில் பிறந்து வளர்ந்தவர் இவர். வழக்கறிஞர். பிடிபி கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்.
நூர் முகமது பாத் : பிடிபி கட்சியை சேர்ந்தவர். பத்தமலூ தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.
குர்ஷித் ஆலம் : பிடிபி கட்சியின் ஸ்ரீநகர் தலைவர். சட்டமன்ற கவுன்சிலில் உறுப்பினராக இருந்தார்.
பஷீர் வீரி : தெற்கு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர். சட்டமன்ற கவுன்சிலில் உறுப்பினராக இருந்தார்.
சயீத் அக்கூன் : தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
தன்வீர் சாதிக் : தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர். ஒமர் அப்துல்லாவின் அரசியல் ஆலோசகர்.
ஷேக் இம்ரான் : ஸ்ரீநகரின் துணை மேயர்.