scorecardresearch

தாஜ்மஹாலுக்கு நோட்டீஸ்.. காரணம் இதுதான்? ஓப்பனாக சொன்ன மாநகராட்சி!

தாஜ்மஹாலின் கிழக்கு வாயிலுக்கு ரூ.1.47 லட்சமும், இத்மத்-உத்-தௌலாவின் சமாதிக்கு ரூ.1.40 லட்சமும் சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது.

property tax property tax notices for Taj Mahal notices for Taj Mahal
தாஜ்மஹாலை பார்வையிடும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்

ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளை இந்தியாவுக்கு ஈர்க்கும் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், அதன் 370 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக சொத்து வரி மற்றும் தண்ணீர் கட்டணத்திற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (ஏஎஸ்ஐ) அதிகாரிகள் இது தவறு என்று கூறுகின்றனர்.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசின் பல்வேறு பிரிவுகளால் தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை ஆகிய இரண்டும் நிலுவையில் உள்ள பில்களுக்காக நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

ஆக்ரா முனிசிபல் கார்ப்பரேஷனின் நோட்டீஸில், தாஜ்மஹாலுக்கு தண்ணீர் வரியாக ரூ.1.94 கோடியும், சொத்து வரியாக ரூ.1.47 லட்சமும், இத்மத்-உத்-தௌலாவின் கல்லறையான மற்றொரு நினைவுச்சின்னத்துக்கு ரூ.1.40 லட்சமும் சொத்து வரியாக செலுத்துமாறு ஏ.எஸ்.ஐ-யிடம் கேட்கிறது.

மேலும், ஆக்ரா கோட்டைக்கு சேவை வரியாக ரூ.5 கோடி வசூலிக்க ஏஎஸ்ஐக்கு ஆக்ரா கண்டோன்மென்ட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதாவது, தாஜ்மஹாலின் கிழக்கு வாயிலுக்கு ரூ.1.47 லட்சமும், இத்மத்-உத்-தௌலாவின் சமாதிக்கு ரூ.1.40 லட்சமும் சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆக்ரா கோட்டைக்கு சுமார் 5 கோடி ரூபாய் சேவை வரி விதிப்பது தொடர்பாக ஆக்ரா கண்டோன்மென்ட் வாரியத்திடம் இருந்து நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது.

ஆக்ரா முனிசிபல் கமிஷனர் ஃபண்டே கூறுகையில், “புவியியல் தகவல் ஆய்வு (ஜிஐஎஸ்) மூலம் கட்டிடங்களை முதன்முறையாக மதிப்பிடும் செயல்முறைக்குப் பிறகு தாஜ்மஹால் மற்றும் இத்மத்-உத்-தௌலாவின் கல்லறைக்கான ஏஎஸ்ஐக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆக்ரா முனிசிபல் கார்ப்பரேஷன் (ஏஎம்சி) ஒவ்வொரு கட்டிடத்திற்கும் அது தேசிய, அரசு, தனியார் அல்லது மத இடமாக இருந்தாலும் அறிவிப்புகளை வெளியிட்டது” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Property tax notices for taj mahal