Advertisment

ஜெயலலிதா மீதான தாக்குதலை கொச்சைப் படுத்துவதா? ஸ்டாலினை கண்டித்து புதுவையில் ரயில் மறியல்

ஜெயலலிதா மீதான தாக்குதலை கொச்சைப் படுத்திப் பேசியதாக ஸ்டாலினைக் கண்டித்து புதுச்சேரி அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pudhucherry AIADMK stage protest

Pudhucherry AIADMK stage protest

ஜெயலலிதா மீதான தாக்குதலை கொச்சைப் படுத்திப் பேசியதாக தி.மு.க தலைவர் ஸ்டாலினைக் கண்டித்து புதுச்சேரி அ.தி.மு.க சார்பில் ரயில் நிலையம் எதிரில் இன்று (ஆகஸ்ட் 14) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாநில கழக செயலாளர் அன்பழகன், "34 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1989 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25-ஆம் நாள் ஜெயலலிதா அவர்கள் எதிர்கட்சி தலைவராக இருந்த போது தமிழக சட்டமன்றத்தில் திமுகவினரால் மிகக் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தை திரித்து தவறான தகவலை பரப்பும் தமிழக பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் புதுச்சேரி அதிமுக சார்பில் நடத்தப்படுகிறது.

மணிப்பூர் சம்பவத்தில் திமுக கனிமொழி எம்.பி. பேசிய தவறான தகவலுக்கு பதிலளிக்கும் போது மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாரமன் அவர்கள், தமிழக சட்டமன்றத்தில்
புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதல் சம்பவம் குறித்து உண்மை கருத்துக்களை எடுத்துக் கூறி திமுகவின் முகத்திரையை கிழித்தெறிந்தார்.

தமிழக சட்டப்பேரவையில் பாலியல் ரீதியாக நடைபெற்ற கொலைவெறி சம்பவத்தை ஸ்டாலின் மறைத்து மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களை அவமதிக்கும் நோக்கத்தில் உண்மைக்கு புறம்பான பொய் செய்தியை ஸ்டாலின் பேசியிருப்பது ஒட்டு மொத்த பெண் இனமும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.

ஒரு முதலமைச்சராக இருக்கும் ஒருவர் பேரவையில் நடைபெற்ற உண்மை நிகழ்வை மறைத்து மாற்றி, திரித்து பேசியிருப்பது திரு. ஸ்டாலின் அவர்கள் முதல்வராக இருப்பதற்கு தகுதியற்றவர் ஆவார்.

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தலை முடியை பிடித்து, இழுத்து, அடித்து, கட்டிய சேலையை இழுத்து கொடூரமான முறையில் கொலை வெறி தாக்குதல் நடத்தியதை மூடி
மறைத்து இச்செயலை நாடகம் என்று கொச்சைப் படுத்தி புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு அவமரியாதையை உருவாக்கும் விதத்தில் பேசியுள்ளார்.

அம்மா அவர்களுக்கு நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாது. மனதில் பட்டதை தைரியமாக பேசக்கூடியவர். ஸ்டாலின் தந்தை கருணாநிதி அவர்களை ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்த போது ஐயோ என்னை கொல்றாங்க என்று நாடகம் நடத்தியவர் கருணாநிதி. அவரது வழியில் அவரது புதல்வன் ஸ்டாலின் அவர்கள் கிழியாத சட்டையை தானே கிழித்துக் கொண்டு சுவர்னர் மாளிகைக்கு சென்று ஓரங்க நாடகம் நடத்தியதை இந்த நாடே மறக்காது.

தான் முதலமைச்சாரக இருந்து கொண்டு எதை வேண்டுமானாலும் பொய் பேசலாம் அதை மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என ஸ்டாலின் நினைத்தால் அது முட்டாள் தனமான செயகையாகும். பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை, உண்மை எப்போதும் உறங்குவதும் இல்லை என்ற புரட்சித் தலைவரின் பொன் மொழிதான் நினைவுக்கு வருகிறது.

publive-image

ஸ்டாலின் அவர்களின் பொய் மூட்டைக்கு சாட்சியாக காங்கிரஸ் கட்சியின் எம்.பியாக தற்போது உள்ள திருநாவுக்கரசு பேசியிருப்பது கடைந்தெடுத்த கயமைத் தனமாகும். முதலில் இந்த திருநாவுக்கரசு யார்?

அதிமுக மூலம் அரசியலில் அடியெடுத்து வைத்து தனி கட்சி, அமைச்சர் பதவிக்காக பிஜேபி, எம்.பி பதவிக்காக காங்கிரஸ் என தன்மானத்தையே பதவிக்காக அடமானம் வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் ஈனப்பிறவி திருநாவுக்கரசுக்கு அதிமுகவைப் பற்றி பேசு எந்தவித தகுதியும், அருகதையும் இல்லை. ஒருவர் மீது விசுவாசம் காட்ட அடுத்தவரை பொய் பேசி அவமானப்படுத்தக் கூடாது என்பதை திருநாவுக்கரசு உணர வேண்டும்.

publive-image

நடைபெற்ற சம்பவத்தின் போது உடனிருந்த கருணாநிதியை நாகூசாமல், துச்சாதனர்களும், துரியோதனர்களும் விரைவில் அழிவார்கள் என்றும், புரட்சித் தலைவி அம்மா அவர்களை தாக்கிய திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு மனு கொடுத்துள்ளோம் என்று பேட்டி அளித்தவர் இந்த திருநாவுக்கரசு. வீரபாண்டி ஆறுமுகம், பொன் முத்துராமலிங்கம், கண்ணப்பன் ஆகிய அமைச்சர்கள் புரட்சித் தலைவி அம்மா அவர்களை தகாத வார்த்தைகளை கூறி தாக்கியதாக கூறினார். திமுகவில் 150 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கையில் நாங்கள் 27 பேர்கள் அவர்களை அடித்ததாக கருணாநிதி கூறுவது எப்படி சாத்தியமாகும் என்று பேட்டியளித்தவர் திருநாவுக்கரசு. ஆனால், இன்று பல்டி அடித்து எதுவும் நடைபெறவில்லை என கூறுவுது அற்ப மனித தனமாகும்.

அன்றைக்கு சட்டசபையில் இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திரு. குமரிஆனந்தன் அவர்கள் இந்த சம்பவத்தை கண்டித்ததோடு, தானும் திமுகவினரால் அடிபட்டதாக கூறியிருந்தார். அதற்காக அன்று இரவே காங்கிரஸ் சட்டமன்ற துணைத்தலைவர் குமரிஆனந்தனை கொல்ல வசந்த் அண்ட் கோவில் திமுகவினர் நுழைந்து 34 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிக்கொண்டு அங்கிருந்த பொருட்களை தூக்கிச் சென்றனர். தினசரி அக்கடைக்கு வரும் திரு குமரி ஆனந்தன் அவர்களை திட்டமிட்டு கொலை செய்யும் நோக்கத்தோடு திமுகவினர் நான்கு ஆட்டோக்களில் அங்கு வந்து அராஜகம் செய்தனர், இது சம்பந்தமாக மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் மனுவும் அளித்தனர்.

இந்த உண்மை நிலையை நன்குணர்ந்த திரு. குமரி ஆனந்தன் அவர்களின் புதல்வியார், புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் திருமதி. தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்கள் தைரியமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உண்மையை மூடி மறைத்து பொய் பேசுகிறார் என பேட்டி அளித்துள்ளார், அதற்காக அவருக்கு புதுச்சேரி அதிமுக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

இன்னொரு திமுக எம்.பியான திருச்சி சிவா அவர்கள் எங்களின் எடப்பாடியார் அவர்களைப் பற்றி சம்பவம் நடந்தபோது இவர் யார் என்று மக்களுக்கு தெரியாது என்று வாய்ஜாலம் காட்டியுள்ளார்.

1989லேயே சட்டமன்ற உறுப்பினராக இருந்து பாராளுமன்ற உறுப்பினராகவும், பல ஆண்டு காலம் தமிழக அமைச்சராகவும், தமிழகத்தின் முதல்வராகவும், கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து இன்று கழகத்தின் பொதுச் செயலாளராகவும் உள்ள மாண்புமிகு எடிப்பாடியார் அவர்களை இவர் யார் என்று மக்களுக்கு தெரியாது என திருச்சி சிவா பேசுகிறார். திருச்சி சிவாவிற்கு நாவடக்கம் தேவை.

சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் திமுகவிற்கு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்" என்று பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி கருணாநிதி, கண்ணன், சுரேஷ்குமார் உட்பட 2000-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

செய்தி: பாபு ராஜேந்திரன்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment