புதுச்சேரி சேதராப்பட்டு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, பெற்றோர் கண்டித்தால் கோபித்து கொண்டு வீட்டை விட்டு சென்ற நிலையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி சேதராப்பட்டு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, பெற்றோர் கண்டித்தால் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றதால் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து சேதராப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து சிறுமியை தேடி வந்தனர்.
இதனிடையே, சில தினங்களில் பிறகு சிறுமி வீட்டுக்கு கு திரும்பினார். அப்போது அவரது பெற்றோர்கள், சிறுமியிடம் எங்கே சென்றாய் என்று கேட்டுள்ளனர். வேலூரை சேர்ந்த ஏழுமலை (32), தற்போது சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார் இவர் சிறுமியுடன் இன்ஸ்டெகிராம் மூலம் அறிமுகமாகி பேசி வந்துள்ளார். அப்போது வீட்டை விட்டு வெளியே சென்றவுடன், ஏழுமலையைப் பார்க்க சென்னைக்கு சென்றார். அப்போது ஏழுமலை தன்னை அழைத்து கொண்டு அவரது வீட்டில் பாலியல் பலாத்தகாரம் செய்து, மீண்டும் புதுவைக்கு பேருந்தில் அனுப்பி பலாத்காரம் செய்ததாக சிறுமி கூறியுள்ளார்.
இத்தகவலை கேட்டத்தும் அதிர்ச்சிடைந்த பெற்றோர்கள், உடனே இச்சம்பவம் குறித்து சேதராப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் ஏழுமலை மீது போஸ்கோ பிரிவின் கீழ் வழக்குபதிந்து, நேற்று (ஜனவரி 22) கைது செய்தனர். மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைக்க உள்ளனர்.