Advertisment

பட்டியல் சாதியினர் இடையே வேறுபாடு கூடாது: புதுவை அ.தி.மு.கவினர் ரங்கசாமியிடம் மனு

புதுச்சேரி மாநிலத்தில் பட்டியல் சாதியினரிடையே பூர்வீகம் மற்றும் புலம்பெயர்ந்தோர் என்ற வேறுபாடு பார்க்கக் கூடாது என அதிமுக சார்பில் கவர்னர் மற்றும் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

author-image
WebDesk
New Update
Puducherry.jpg

புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் துணை நிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை செளந்தரராஜன்,  முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து கடிதம் ஒன்றை வழங்கினார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, 

Advertisment

50 ஆண்டுகளுக்கு மேலாக புதுச்சேரியில் வசித்து வரும் பட்டியல்  இனத்தவருக்கும் 60 ஆண்டுகளுக்கு முன்பு தங்களது அறியாமையால் பதிவு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் பதிவு செய்யாத பட்டியல் இன மக்களுக்கு உரிய சாதி சான்றிதழ் மறுக்கப்படுகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்கள் தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் புதுச்சேரி மண்ணின் பட்டியல்  இனத்தவருக்கு உரிய நலன் சார்ந்த உரிமையை பெறமுடியாத துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 341வது பிரிவின்படி, குடியரசு தலைவர் "அரசியலமைப்பு (புதுச்சேரி) பட்டியலிடப்பட்ட சாதிகள் ஆணை 1964 என்ற உத்தரவில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் தொடர்பாக அரசியலமைப்பின் நோக்கத்திற்காக 15 சாதிகளை குறிப்பிட்டு அவர்கள் பட்டியல் சாதியினர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சட்டப்பிரிவு 341(1)ன் கீழ் குடியரசுத் தலைவரின் அறிவிப்பின் அடிப்படையில், பட்டியலிடப்பட்ட 15 சாதிகளின் உறுப்பினர்களில் உரிமை மற்றும் பலன் கூறும் மக்கள் புதுச்சேரியிலேயே பிறந்தவர்கள் புலன் பெயர்ந்தவர்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல், இப்பிரதேசத்தில் குடியிருப்பாளராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 உண்மையான நிலை இவ்வாறு இருக்க, அரசியலமைப்புச் சட்டம் (பாண்டிச்சேரி) பட்டியலிடப்பட்ட சாதிகள் ஆணை, 1964 மற்றும் "எஸ்.புஷ்பா மற்றும் பலர் vs சிவசண்முகவேலு மற்றும் பலர்" என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் கவனத்தில் இரண்டு அரசாணைகளை 5-8-2005-ல் புதுச்சேரி அரசு வெளியிட்டது.

புதுச்சேரி அரசால் 5-8-2005-ல் வெளியிடப்பட்ட G.O Ms.No.11/2005/ (SCW II) குரூப்-C மற்றும் குரூப்-D பணியிடங்களில் வேலை மற்றும் பதவி உயர்வுகளில் குடியபெயர்ந்த பட்டியலின மக்களை உரிமை கோர மறுக்கிறது. G.O.Ms 12/2005/Wel (SCW) உயர் கல்வியில் 1964-க்கு பிறகு குடியேறிய அட்டவணை இனத்தவருக்கு இடஒதுக்கீட்டை மறுக்கிறது. இந்த இரண்டு அரசாணைகள் மூலம் 50 ஆண்டு காலமாக புதுச்சேரியில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு உரிய உரிமைகள் முழுமையாக மறுக்கப்பட்டு அவர்கள் அரசு நிர்வாக ரீதியில் கைவிடப்பட்டவர்களாக உள்ளனர்.

இதை எதிர்த்து, புதுச்சேரி எஸ்.சி மக்கள் நலச் சங்கம் தாக்கல் செய்த மேல்முறையீட்டின் அடிப்படையில்,  உச்ச நீதிமன்றம், ஆகஸ்ட் 7, 2014 தேதியிட்ட சிவில் மேல்முறையீட்டு எண் 10829 – 10829-10830 இல் இரண்டு அரசு ஆணைகளையும் ரத்து செய்தது. பட்டியல் சாதியினரிடையே பூர்வீகம் மற்றும் புலம்பெயர்ந்தோர் என்ற வேறுபாடு பார்க்கக் கூடாது என தெரிவித்து இருந்தது. இருப்பினும், புதுச்சேரி யூனியன் பிரதேசம் தொடர்பாக குடியரசுத் தலைவர் உத்தரவு அறிவிக்கப்பட்ட முக்கியமான தேதியில் அதாவது 5.3.1964 அன்று புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு மட்டும் புதுச்சேரி அரசு இடஒதுக்கீடு சலுகைகளை இன்று வரை வழங்கி வருவது சட்ட விரோதமான செயலாகும்.

2011 இன் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகை 12,47,953 ஆகும். பட்டியல் சாதியினரின் மக்கள் தொகை 1,96,325 ஆக உள்ளது, இது கிட்டத்தட்ட 16 சதவீதமாகும். மொத்த SC மக்கள்தொகையில் 16 சதவீதம் பேர் அதாவது 1,96,325 பேர், சுமார் 10 சதவீதம் பேர் எஸ்சி இனத்தைச் சேர்ந்தவர்கள் (1,24,000) எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. மீதமுள்ள 6 சதவீத மக்கள் புலம்பெயர்ந்தோர் என்று அழைக்கப் படுகிறார்கள். இதில் தனது அறியாமையால் தனது குடியிருப்பை பதிவு செய்யாத வர்களும் அடக்கம். இவ்வாறு சுமார் 72,000 அட்டவணை இன மக்கள் உள்ளனர்.

புதுச்சேரி அரசு மொத்த பட்ஜெட்டில் 16 சதவீதத்தை எஸ்சி பிரிவின் கீழ் ஒதுக்குகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்த 16 சதவீத நிதியானது 10 சதவீத பூர்வீக அட்டவணை இன மக்களுக்கு மட்டுமே செலவிடப் படுகிறது.

 உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நோக்கங்களுக்காக மீதமுள்ள 6 சதவீத எஸ்சி மக்கள் நலத் திட்டங்களுக்காகப் பயன் பெறுவதைக் கருத்தில் கொள்ளவில்லை. அவர்களில் சிலர் பூர்வீமாக குடிமக்களாக இருந்தாலும் அதற்குரிய ஆதாரம் இல்லாததால் அவர்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை.

பிறப்பிடங்களுக்கு மட்டுமே பலன்களை விரிவு படுத்தும் அரசின் கொள்கையின்படி கனிசமான எண்ணிக்கையிலான எஸ்சிக்கள் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்தவர் என்ற காரணத்திற்காக எந்த நன்மையும் மறுக்கப்படுகிறார்கள். 

புலப்பெயர்ந்துவர்கள்  கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

 1 அவர்களில் சிலர் புதுச்சேரியில் பிறந்து முக்கியமான தேதியில் வசிப்பவர்கள். ஆனால் அறியாமையின் காரணமாக அவர்களால் அரசாங்கத்தால் கோரப்பட்ட எந்த ஆதாரத்தையும் சமர்பிக்க முடியலில்லை.

2.கல்வியறிவின்மை காரணமாக அவர்களின் சிலர் முக்கியமான தேதியில் உண்மையான குடியுரிமை பெற்றிருந்தாலும் அவர்களின் பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்யவில்லை.

3. வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நோக்கங்களுக்காக புதுச்சேரிக்கு வந்து குடியேறிய எஸ்சி நபர்கள் புதுச்சேரியில் இட ஒதுக்கீட்டின் நோக்கத்திற்காக எஸ்.சிகளாக கருதப்படுவதில்லை 1975 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் புதுச்சேரியில் லெப்டினன்ட் கவர்னராக இருந்த திரு செட்டிலால் நிரப்பப்படாத இட ஒதுக்கீடு காலிப்பணி யிடங்களை நிரப்புவதற்கு பிற மாநிலங்களில் இருந்து எஸ்சி விண்ணப்பதாரர்களை நியமித்தார் என்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கலாம். அதன் விளைவாக அவர்கள் புதுச்சேரியில் வசிப்பவர்களாக மாறி அவர்களுக்கு எஸ்சி உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

4. திருமணத்திற்கு பிறகு இங்கு குடியேறியவர்கள் மற்றும் 40 முதல் 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வாழ்பவர்கள் புலம்பெயர்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள். மற்றும் அவர்களுக்கு அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள நியாயமான உரிமை மறுக்கப்படுகிறது. இங்கேயும் இல்லை அங்கேயும் இல்லை என்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

5 அவர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலை மற்றும் வாழ்க்கை நிலைமைகள் பூர்விக எஸ்.சி களின் நிலையிலேயே இருந்தும் அவர்கள் புலம்பெயர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காக எஸ்.சிகளுக்கு சமூக நீதி மறுக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் உத்தரவை நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம். அரசியலமைப்பு (பாண்டிச்சேரி) பட்டியலிடப்பட்ட சாதிகள் ஆணை 1964 புதுச்சேரியின் தோற்றம் பற்றி பேசவில்லை மற்றும் அது குடியிருப்பாளர்களை மட்டுமே பேசுகிறது. வேலை வாய்ப்புகள் மற்றும் உயர்கல்வியில் இடஒதுக்கீடு விஷயத்தில் புலப்பெயர்ந்த எஸ்சிக்களுக்கு அளிக்கப்படும் மாற்றாந்தாய் போக்கை நீக்க வேண்டியது அவசியமானதாகும் . எற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேதியை இக்கால சூழ்நிலைக்கேற்ப மாற்றம் செய்ய வேண்டும்.

அரசுப் பணிகளில் ஒபிசி இட ஒதுக்கீட்டிற்கான மண்டல் கமிஷன் பரிந்துரைகள் 1992 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்பட்டது. இருப்பினும் 2001 ஆம் ஆண்டு வரை புதுச்சேரியில் வசிப்பவர்கள் வேலைகள் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக OBC ஒதுக்கிட்டின் கீழ் இட ஒதுக்கிட்டின் பலனைப் பெறத் தகுதியுடையவர்கள் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இதேபோல் எஸ்சிக்களுக்கான குடியுரிமைப் பிரிவினருக்கான ஆண்டின் OBC இட ஒதுக்கீட்டிற்கு புதுச்சேரி அரசு நிர்ணயித்த ஆண்டோடு ஒத்துப் போகும் வகையில் மாற்றப்படலாம். OBC போன்று 2001-ஆம் ஆண்டிலிருந்து இங்கு வசித்து வரும் SC மக்களுக்கு SC இட ஒதுக்கீட்டின் கீழ் பலன் பெறும் ஆண்டை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

 இந்நிகழ்ச்சியின் போது மாநில கழக அவைத் தலைவர் ஜி. அன்பானந்தம்,  மாநிலக் கழக இணைச் செயலாளர்கள் வீரம்மாள், ஆர்.வி திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் கணேசன் ,மாநில துணை செயலாளர் குமுதன், மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன், புதுச்சேரி நகர செயலாளர் அன்பமுகன் உடையார் புதுச்சேரி மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ் வேந்தன் ஆகியோர் உடனிருந்தனர். 

செய்தி: பாபு ராஜேந்திரன் 

 “தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment