புதுச்சேரி தாவரவியல் பூங்கா ரூ.9 கோடி செலவில் புனரமைப்பு; செப்டம்பரில் திறப்பு விழா – அமைச்சர் அறிவிப்பு

புதியதாக புனரமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா செப்டம்பரில் திறக்கப்படும்; கட்டணம் இந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் – புதுச்சேரி வேளாண்மை துறை அமைச்சர்

புதியதாக புனரமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா செப்டம்பரில் திறக்கப்படும்; கட்டணம் இந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் – புதுச்சேரி வேளாண்மை துறை அமைச்சர்

author-image
WebDesk
New Update
theni jayakumar

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 9 கோடி ரூபாய் செலவில் புதியதாக புனரமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா வரும் செப்டம்பர் மாதம் திறக்கப்பட உள்ளதாக வேளாண் துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தெரிவித்தார்.

Advertisment

புதுச்சேரியில் பழமையும் பாரம்பரியமும் வாய்ந்த தாவரவியல் பூங்கா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 9 கோடியே 89 லட்ச ரூபாய் செலவில் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி தாவரவியல் பூங்காவில் உள்ள உல்லாச ரயில் நடைபாதை, கண்ணாடி மாளிகை சிறுவர்கள் பூங்கா விளையாட்டு உபகரணங்கள் என அனைத்தும் புதிதாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் பணிகள் 90% முடிவடைந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 29) வேளாண்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார் மேலும் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேளாண் துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், “புதுச்சேரி தாவரவியல் பூங்கா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது பணிகள் முடிந்தவுடன் முதல்வருடன் கலந்து பேசி செப்டம்பர் மாதம் பூங்காவை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisment
Advertisements

தாவரவியல் பூங்காவில் ஐந்து வயதிற்கு மேல் சிறுவர்களுக்கு 5 ரூபாய் கட்டணமும் பெரியவர்களுக்கு 10 ரூபாய் கட்டணமும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 50 சதவீதம் சலுகையில் கட்டணமும் வசூலிக்கப்பட உள்ளது. மேலும் சிறுவர்களின் உல்லாச ரயிலின் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் தர சான்றிதழ் பெற்றவுடன் சிறுவர்கள் ரயில் இயக்கப்படும்,” என்று கூறினார்.

அமைச்சரின் ஆய்வின்போது வேளாண் துறை செயலர் சையது முகமது யாசின், மற்றும் ஸ்மார்ட் சிட்டி தலைமை தொழில்நுட்ப அதிகாரி ரவிச்சந்திரன், தோட்டக்கலை இணை இயக்குனர் சண்முகவேலு ஆகியோர் உடன் இருந்தனர்.

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: