திருமாவளவனின் அறிவுரை தேவையில்லை: புதுச்சேரி அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் பேட்டி

தி.மு.க. கூட்டணியில் இருக்கும் திருமாவளவனின் ஆலோசனை அ.தி.மு.க.வுக்குத் தேவையில்லை என்று புதுச்சேரி அ.தி.மு.க. மாநிலச் செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.

தி.மு.க. கூட்டணியில் இருக்கும் திருமாவளவனின் ஆலோசனை அ.தி.மு.க.வுக்குத் தேவையில்லை என்று புதுச்சேரி அ.தி.மு.க. மாநிலச் செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
pondy admk

திருமாவளவனின் அறிவுரை அ.தி.மு..க.வுக்குத் தேவையில்லை: புதுச்சேரி அ.தி.மு.க.

தி.மு.க. கூட்டணியில் இருக்கும் திருமாவளவனின் ஆலோசனை அ.தி.மு.க.வுக்குத் தேவையில்லை என்று புதுச்சேரி அ.தி.மு.க. மாநிலச் செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பட்டியல் சமூகத்தினரின் உரிமைகளைத் தி.மு.க. கூட்டணிக்கு அடகுவைக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் அ.தி.மு.க அழிந்துவிடும் என்று தெரிவித்திருப்பது சந்தர்ப்பவாதமான செயல். திருமாவளவனுக்கு உண்மையிலே அ.தி.மு.க. மீது அக்கறை இருந்தால், அவர் முதலில் தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும்.

Advertisment

அண்மையில் திருமாவளவன், தி.மு.க. கூட்டணிக்கு கிடைக்கும் வாக்குகளில் நான்கில் ஒரு பங்கும், 25% வாக்குகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வாக்குகள் என்றும் கூறியிருந்தார். இதனை இதுவரை தி.மு.க.வோ அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளோ மறுக்கவில்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 25% இடங்களை, அதாவது சுமார் 58 இடங்களை, தி.மு.க. கூட்டணியில் இருந்து வி.சி.க. பெற்றால், அ.தி.மு.க. அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் என்றும் அன்பழகன் கூறினார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து காங்கிரஸ் கட்சியின் இரட்டை நிலைப்பாடு குறித்து அன்பழகன் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதும், மத்தியிலும் மாநிலத்திலும் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தபோதும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க முன்வரவில்லை. ஆனால், 3 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 2 புதிய யூனியன் பிரதேசங்களை உருவாக்கியது. தற்போது ராகுல் காந்தியும், கார்கேவும் இந்த யூனியன் பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்க நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவர வேண்டும் என கடிதம் எழுதியுள்ளனர்.

ஆனால், காங்கிரஸ் கட்சியைப் பலமுறை ஆட்சியில் அமரவைத்த புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தியோ அல்லது கார்கேவோ பிரதமரை வலியுறுத்தாதது அவர்களின் சந்தர்ப்பவாத அரசியலைக் காட்டுகிறது. எனவே, புதுச்சேரியின் மாநில அந்தஸ்து பற்றி பேச காங்கிரஸுக்கு எந்தத் தகுதியும் இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று அன்பழகன் வலியுறுத்தினார்.

Advertisment
Advertisements

மறைந்த தலைவர்களை விமர்சிப்பது தவறு என அன்பழகன் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவரான நாடாளுமன்ற உறுப்பினர் சிவா, பெருந்தலைவர் காமராஜரை தரக்குறைவாகப் பேசியதைக் கண்டித்தார். கடந்த முறை பா.ஜ.க. கூட்டணியில் இருந்தபோது, அப்போதைய பாஜக தலைவரான அண்ணாமலை பேரறிஞர் அண்ணாவை தவறாகப் பேசியதால், மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தபோதே அக்கூட்டணியில் இருந்து விலகுவதாக எடப்பாடி பழனிசாமி தைரியமாக அறிவித்ததைக் குறிப்பிட்டார்.

ஆனால், காமராஜரைப் பற்றி தவறாகப் பேசிய திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸார் வெளியேறத் தயாரா என்று கேள்வி எழுப்பினார். திமுக தலைவர் ஸ்டாலின் காமராஜர் பற்றி தவறாகப் பேசியதற்காகப் பொதுமக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அன்பழகன் கோரினார். ஒவ்வொரு தேர்தலின்போதும் காமராஜரை முன்னிறுத்தி காங்கிரஸ் தேர்தலை சந்தித்து வருவதையும் அவர் நினைவூட்டினார்.

காமராஜர் பற்றி தவறாகப் பேசிய தி.மு.க.வை கண்டிக்காமல், முன்னாள் முதல்வர்களான நாராயணசாமி மற்றும் வைத்திலிங்கம் இருவரும் மௌனம் காப்பதாகவும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வைக் கண்டித்தால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால் வாய்மூடி இருக்கின்றனர் என்றும் குற்றம் சாட்டினார். அற்ப வாக்கு வங்கிக்காக பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்திய தி.மு.க.வைக் கண்டிக்க கூட திராணியற்ற கட்சியாக புதுச்சேரி காங்கிரஸ் உள்ளது என்றும், வரும் தேர்தலில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் காங்கிரஸ் தொண்டர்கள் தி.மு.க. வேட்பாளர்களுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அன்பழகன் வேண்டுகோள் விடுத்தார்.

பெருந்தலைவர் காமராஜர் பற்றி தவறாகப் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சிவாவின் கருத்தை அதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது. எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்திற்காக புதுச்சேரி வந்தபோது, அவருக்கு பா.ஜ.க. தலைவர்களும், என்.ஆர்.காங்கிரஸ் பொதுச் செயலாளரும் மரியாதை நிமித்தமாக சந்தித்ததற்கு, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் அதிமுக சார்பில் அன்பழகன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். பேட்டியின்போது மாநிலக் கழகப் பொருளாளர் ரவிபாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர்கள் நாகமணி, குமுதன் ஆகியோர் உடனிருந்தனர்.

Pudhucherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: