புதுச்சேரி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளராக புதுச்சேரி மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தனை அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனை அ.தி.மு.க தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். இந்த நிலையில், மாநில கழக செயலாளர் அன்பழகன் கூறுகையில், “புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக தமிழ்வேந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவர், கழகத்தினுடைய பல்வேறு போராட்டங்களை எங்களோடு இருந்து முன்னின்று நடத்திய ஒரு இளைஞர். தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வரும் தமிழ்வேந்தன் இந்த பாராளுமன்ற தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவார். அவருக்கு புதுச்சேரி மாநில மக்கள் ஆதரவு கொடுப்பார்கள்” என்றார்.
தொடர்ந்து, புதுச்சேரியில் ஆளும் பாஜக கூட்டணி அரசால் வேட்பாளரை நிறுத்த கூட திராணி இல்லை. காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு தேசிய கட்சிகளும் புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து அளித்து வரும் துரோக செயலை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். இங்கு அ.தி.மு.க.வின் வெற்றி உறுதியான ஒள்று” என்றார்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“