வக்பு வாரிய திருத்த மசோதாவை திரும்ப பெற தி.மு.க வலுயுறுத்தவில்லை ஏன்? புதுவை அ.தி.மு.க கேள்வி

நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த மசோதாவை திரும்ப பெற எதிர்க்கட்சியான தி.மு.க வலியுறுத்தாதது, சிறுபான்மையின மக்களை ஏமாற்றும் செயல் என அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார் .

நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த மசோதாவை திரும்ப பெற எதிர்க்கட்சியான தி.மு.க வலியுறுத்தாதது, சிறுபான்மையின மக்களை ஏமாற்றும் செயல் என அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார் .

author-image
WebDesk
New Update
PDy AIADMK

புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் மக்களை அதிகமாக பாதிக்கின்ற விதத்தில் இருப்பதால் மக்களுடைய தாகத்தை தணிக்கின்ற விதத்தில் புதுச்சேரி அதிமுக சார்பில் சார்பில் நீர் மோர் பந்தல் தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக மாநில செயலாளர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், இளநீர், தர்பூசணி, கிர்ணி பழம், நுங்கு உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.மேலும் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக சார்பில் புதிதாக மோர் பந்தல் திறந்து மக்களுக்கு இலவச நீர் மோர் வழங்கப்படும் என்றார்.

Advertisment

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன்,நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 6 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள திமுக பல்வேறு முக்கியமான பிரச்சனைகளில் வாய் மூடி மவுனம் காத்து ஆளும் அரசுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்தனர். குறிப்பாக தனியார் மருத்துவ கல்லூரி அரசு இட ஒதுக்கீட்டில் தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவுபடி 50% இடங்களை பெற அரசை வலியுறுத்தாமல் மவுனம் காத்தனர்.

தி.மு.க ஆட்சி நடத்தும் தமிழகத்தில் அதிமுகவின் கோரிக்கையை ஏற்று வக்பு வாரிய திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சூழ்நிலையில் புதுச்சேரியில் அதுபோன்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற திமுக வாய்மூடி மவுனம் காத்தனர். இப்படிப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினால் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்ததாக அரசு நினைத்துவிடும் என மவுனம் காத்தனர். இது சிறுபான்மை மக்களை ஏமாற்றும் செயலாகும். தேர்தல் நேரத்தில் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் என பொய் வாக்குறுதிகளை கொடுத்து வெற்றிபெற்ற பிறகு சிறுபான்மை மக்களுக்கு எதிராக திமுக செயல்படுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளது.

தி.மு.க-வை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் சிறுபான்மை மக்கள் இதை உணர வேண்டும் என்றார்.

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: