/tamil-ie/media/media_files/uploads/2023/07/Puducherry-ADMK-Anbazhagan.jpeg)
சிறுபான்மையினர் அதிமுகவை ஆதரிக்கின்றனர் என புதுச்சேரி அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.
Puducherry Assembly | Aiadmk | புதுச்சேரி அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன், 'பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என பொதுச் செயலாளர் எடப்பாடியார் அறிவித்துள்ள நிலையில் சிறுபான்மையினர் அதிமுகவிற்கு ஆதரவு அளித்து வருவது திமுக கூட்டணியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்றார்.
தொடர்ந்து, தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த அதிமுக தலைவர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை புகழ்ந்து உண்மையை பேசினார்.
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு புதுச்சேரி பாஜகவினர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படங்களை பயன்படுத்தி போஸ்டர் மற்றும் சமூக வலைதளங்களில் வாக்கு கேட்டு மலிவு விளம்பரம் தேடுகின்றனர்.இதனை புதுச்சேரி அதிமுக வன்மையாக கண்டிக்கிறது என்றார்.
மாநில அந்தஸ்து வழங்காமலும்,புதுச்சேரி மாநிலத்தை மத்திய நிதி குழுவில் சேர்க்காமலும் மாநிலத்திற்கு எந்த நன்மையும் செய்யாத பாஜக தேர்தல் நேரத்தில் செய்யும் கபட நாடகத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.
மேலும், மாநில அந்தஸ்து தராத பாஜகவிற்கு முதல்வர் ரங்கசாமி ஆதரவாக செயல்படுகிறார் என கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரியில் 2 முறை ரங்கசாமி முதல்வராக ஆதரவளித்தது அதிமுக தான் என்றும், அதனை உணர்ந்து அதிமுகவிற்கு முதலமைச்சர் ரங்கசாமி ஆதரவு அளிக்க வேண்டும் என்ற அன்பழகன், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக நிச்சயம் மாபெரும் வெற்றி பெறும் என்றார்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.