/tamil-ie/media/media_files/uploads/2023/07/Pudhucherry-anbalagan.jpg)
புதுச்சேரி அதிமுக ஆலோசனைக் கூட்டம்
புதுச்சேரி மாநில கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் தலைமையில் மாநில கழக அவைத் தலைவர் அன்பானந்தம் முன்னிலையில் உப்பளம் தலைமை கழகத்தில் இன்று நடந்தது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில கழக செயலாளர் அன்பழகன் பேசுகையில், “காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தண்டனைக்கு தடைவிதிக்க மறுத்த குஜராத் உயர் நீதிமன்றத்தையும் அதன் நீதிபதியையும் தரக்குறைவாக பேசி புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
ஒரு மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தையும் அதன் நீதிபதியையும் அவர் வழங்கிய திருப்பியும் தரக்குறைவாக விமர்சனம் செய்து பேசியுள்ள புதுச்சேரியின் முன்னாள் முதல்வர்கள் நாராயணசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் மீது புதுச்சேரி நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய் செய்ய புதுச்சேரி டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும் எங்கள் கூட்டணி புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் மகத்தான வெற்றியைப் பெறும்.
39 பாராளுமன்ற உறுப்பினர்களை கைவசம் வைத்துள்ள திராவிட முன்னேற்றக் கழக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்.
அடுத்த மாதம் மதுரையில் நடைபெறும் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்காக புதுச்சேரியில் இருந்து நூற்றுக்கணக்கான வாகனங்களில் மதுரைக்கு நாம் செல்ல வேண்டும்.
மாநில முழுவதும் நம்முடைய மாநாடு சம்பந்தமான சுவர் விளம்பரங்களை கழகத்தின் அனைவரும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி யார் அவர்கள் ஆணையின்படி விளம்பரப்படுத்த வேண்டும்” என்றார்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.