ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி புதுச்சேரி ஓய்வூதிய சங்கத்தினர் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தேசிய ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு புதுச்சேரி கிளை சார்பில் மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி நிறைவேற்றிய நிதி சட்டத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு பாரபட்சம் காட்டும் பிரிவை திரும்ப பெறவேண்டும், 8-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அனைத்து ஓய்வூ தியதாரர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி புதுவை அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி கிளை தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் ராதா கிருஷ்ணன், சங்கத்தின் பொறுப்பாளர்கள் சண்முகம், சுலிய மூர்த்தி, ராமகிருஷ்ணன் அரசு ஊழியர் சம்மேளன நிரந்தர செய்தி தொடர்பாளர் கலைமாமணி டாக்டர் நமச்சிவாயம் உள்பட பலர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.