புதுச்சேரி குயவர்பாளையம் லெனின் வீதியில் அமுத சுரபி சிக்கனம் மற்றும் கடன் கூட்டுறவு சங்கம் லிமிடெட் என்ற நிறுவனம் இயங்கிவந்தது.
இந்த நிறுவனத்தில் வைப்பு நிதி, வாராந்திர சேமிப்பு மற்றும் தினசரி சேமிப்பு ஆகியவற்றில் பொது மக்கள் தங்கள் பணத்தை சேமித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2021 ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அந்த நிறுவனத்தின் பொறுப்பாளகள் மொத்தம் சுமார் 90 லட்சம் பணத்தை கையாடல் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவரான பார்வதி என்பவர் உளுளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் புதுச்சேரி எஸ்.எஸ்.பி (சட்டம் & ஒழுங்கு) நாரா சைத்தன்யா மற்றும் எஸ்.பி (கிழக்கு) ஸ்வாதி சிங் ஆகியோர் குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் ஜெ.பாபுஜி அறிவுறுத்தலின்பேரில் உதவி-ஆய்வாளர் ஆர்.சந்திரசேகரன் காவலர் பிரேம், செல்லதுரை, மணிகண்டன், வேல்முருகன் ஆகியோர்கள் அடங்கிய தனி படை அமைக்கப்பட்டது.
இந்தத் தனிப்படை போலீசார் மேற்படி வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சேலம் தங்கப்பழம் (43) த/பெ செங்கன், என்பவரை கைது செய்தனர்.
தொடர்ந்து, இன்று (19.07.2023) அவரை நீதிமன்ற நடுவர் முன் ஆஜர் படுத்தி காலாபட்டு சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“