புதுச்சேரியில் அரசு பள்ளி கல்லூரிகளில் படிக்கும் பெண்களுக்கு நாப்கின் இங்கும் இயந்திரத்தை பாரத் பெட்ரோலியம் இந்த ஆண்டு வழங்கப்பட உள்ளது என அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் முன்பு தெரிவித்தனர்.
Advertisment
தனியார் நிறுவங்கள் சமுதாய பங்களிப்பு திட்டச் செயல்பாடுகள் குறித்த பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தனியார் நிறுவங்கள் சமுதாய பங்களிப்பு திட்டத்தின்கீழ் புதுச்சேரி மாநிலத்தில் செயல்படுத்தக் கூடிய திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இந்த ஆண்டு சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகல்லூரிகளில் கழிவறைகள் கட்டுதல், சுகாதார நாப்கின் வழங்கும் எந்திரங்கள் நிறுவுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஆகும் செலவுகளை பாரத் பெட்ரோலியம் முழுமையாக செய்யும் எனவும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, கல்வித்துறை செயலர் ஜவகர், துணைநிலை ஆளுநரின் செயலர் அபிஜித் விஜய் சௌதரி, கல்வித்துறை இயக்குனர் ருத்ரகௌடு மற்றும் பிபிசிஎல் நிறுவனத்தின் தெற்கு மண்டல பொது மேலாளர் சுஷ்மித் தாஸ், புதுச்சேரி பகுதி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.