பா.ஜ.க பிரமுகர் படுகொலை: ‘குற்றவாளிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்’ – புதுச்சேரி தி.மு.க எம்.எல்.ஏ சிவா

‘புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். இதற்கு முதல்வர் உத்தரவிட்டு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்’ என திமுக எதிர்க்கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான சிவா சட்டமன்றத்தில் பூஜ்ஜிய நேரத்தில் பேசினார்.

Puducherry: BJP functionary hacked to death, DMK R. Siva speech Tamil News
BJP functionary hacked to death in Puducherry, MK R. Siva speech Tamil News

பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவையில் பூஜ்ய நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பேசியது: –

புதுச்சேரியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மக்கள் அச்சத்தில் வாழும் சூழல் உள்ளது. மாநிலத்தில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அவர்களின் தீவிர ஆதரவாளர், மங்கலம் தொகுதி பாஜக செயலாளர் பொறுப்பில் இருந்தவர் வில்லியனூர் கணுவாப்பேட்டையை சேர்ந்த திரு. செந்தில்குமார் (வயது 46) நேற்றிரவு நாட்டு வெடிகுண்டு வீசியும், கொடூர ஆயுதங்கள் கொண்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை உள்ளது. கொலையாளிகள் சவுகரியமாக வந்து கொலை செய்துவிட்டு செல்லும் நிலை புதுச்சேரியில் தொடர்கிறது. வில்லியனூர் தொகுதியில் கஞ்சா விற்பனை முழுநேர தொழிலாக மாறிவிட்டது. இதனை கட்டுப்படுத்த வேண்டிய வில்லியனூர் காவல் துறை ஆய்வாளரின் நடவடிக்கையே மக்கள் மத்தியில் ஏளனமாக பேசப்படுகிறது. சட்டம்–ஒழுங்கு சீர்கெடுவதற்கு அவரே முழு காரணமாக இருக்கிறார்.

 வில்லியனூரில் எஸ்.பி இருந்தும் அவரின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் ஆய்வாளர் அவர்களின் அதிகார அத்துமீறல் அதிகரித்துள்ளது. உளவுத்துறை, எஸ்பி பிரிவு காவலர்கள் சரியான தகவல் கொடுத்தும் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்காததால் தான் இந்த படுகொலை அரங்கேறி உள்ளதாக பேசப்படுகிறது.

அரசு இதுபோன்ற செயல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும். இந்த கொலையின் பின்னணி குறித்து ஆராய வேண்டும். அதுவரை அந்த ஆய்வாளரை தற்காலிக பணிநீக்கம் செய்து, வேறு ஒரு அதிகாரியை நியமித்து, இந்த வழக்கின் உண்மை நிலை வௌியில் வரவேண்டும் என இந்த அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Puducherry bjp functionary hacked to death dmk r siva speech tamil news

Exit mobile version