த.வெ.க தலைவர் விஜய்யுடன் கூட்டணி என முதல்வர் ரங்கசாமி அறிவித்தால்,அதன்பிறகு பா.ஜ.க. தனது நிலைப்பாட்டை சொல்லும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்
சமீபத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நிலையில், வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் புதுவையில் த.வெ.க.-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான பேச்சு ஏற்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் நமச்சிவாயம் பதில் அளித்துள்ளார்.
இதில், கூட்டணி அமைப்பது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி அல்லது த.வெ.க. தலைவர் விஜய் ஏதாவது கூறியுள்ளார்களா? பொதுவாக தேர்தல் குறித்து மக்களிடம் பல்வேறு கருத்துக்கள், எதிர்பார்ப்புகள் நிலவுவது வழக்கம். அது பொய்யாகவும் இருக்கலாம், உண்மையாகவும் இருக்கலாம். அந்த கருத்து யார் வாயால் கூறப்படுகிறது என்பதுதான் முக்கியம்.
இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் கூறினால்தான் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலமைச்சர் ரங்கசாமியும், த.வெ.க. தலைவர் விஜயும் கூட்டணி குறித்து அறிவிக்கட்டும், அதன்பிறகு பா.ஜ.க. தனது நிலைப்பாட்டை சொல்லும். வதந்திகளுக்கு பதில் கூற முடியாது என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“