ரூ.436 கோடியில் மேம்பாலம் பணி: புதுச்சேரியில் அடிக்கல் நாட்டிய நிதின் கட்கரி

ரூ.436 கோடியில் ராஜிவ் - இந்திரா சதுக்கம் மேம்பாலம் பணிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று அடிக்கல் நாட்டினார் நாளொன்றுக்கு 60 ஆயிரம் வாகனங்கள் செல்லலாம் 9 லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள்

ரூ.436 கோடியில் ராஜிவ் - இந்திரா சதுக்கம் மேம்பாலம் பணிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று அடிக்கல் நாட்டினார் நாளொன்றுக்கு 60 ஆயிரம் வாகனங்கள் செல்லலாம் 9 லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள்

author-image
WebDesk
New Update
Puducherry nb

புதுச்சேரியில் 436 கோடி ரூபாயில், 3.8 கி.மீ., நீளத்திற்கு பிரமாண்டமாக அமைய உள்ள உயர் மேம்பாலம் பணியை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று அடிக்கல் நாட்டி, துவக்கி வைத்தார்

Advertisment

புதுச்சேரியில் இந்திரா சிக்னல் முதல் ராஜிவ் சிக்னல் வரை 3.877 கி.மீ., நீளத்திற்கு உயர் மேம்பாலம் ரூ. 436 கோடியில் கட்டப்பட உள்ளது.  மேலும் ரூ.25.05 கோடி மதிப்பில் 13.63 கி.மீ., தொலைவிற்கு இ.சி.ஆர்., சாலையும் மேம்படுத்தப்பட உள்ளது. இந்தஇரு மெகா திட்டங்களும் தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை கூட வேளாண் வளாகத்தில் இன்று13ம் தேதி நடக்கும் விழாவில் அடிக்கல் நாட்டப்பட்டது

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை நிதின் கட்கரி அடிக்கல் நாட்டி துவக்கி பணிகளை துவக்கி வைத்தார். புதுச்சேரி முதல் பூண்டியான்குப்பம் வரை 38 கி.மீ., நீளத்திற்கு 1,588 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்ட நான்கு வழிச்சாலையை நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். விழாவில் மத்திய அமைச்சர் முருகன், கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, தமிழக அமைச்சர்கள் வேலு, பன்னீர்செல்வம், சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பேசினார்

புதுச்சேரி நகர பகுதியில் காலை 8:00 முதல் மாலை 3:00 மணி வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விழா நடக்கும் பகுதிகள் வாகனங்கள் இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தட்டாஞ்சாவடிதொழிற்பேட்டை வேளாண் வளாக மைதானம் மற்றும் கொக்கு பார்க் பூங்கா அருகே உள்ள சாலைகளில் எந்தவித வாகனங்களும் செல்லவும், நிறுத்தவும் அனுமதி இல்லை.

Advertisment
Advertisements

இதேபோல் காலை 8:00 முதல் மாலை 3:00 மணி வரை லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில்இருந்து லதா ஸ்டீல் ஹவுஸ் சந்திப்பு - கொக்கு பார்க் அருகில் உள்ள வேளாண் வளாக மைதானம், ராஜிவ் சிக்னல் வரை கனரக வானங்கள், இலகுரக வாகனங்கள், பஸ்கள் செல்ல அனுமதி இல்லை. கிழக்கு கடற்கரை சாலை சிவாஜி சிலை சந்திப்பில் இருந்து ராஜிவ் சதுக்கம் வரையிலும், திண்டிவனம் சாலையில் கோரிமேடு பார்டர் முதல் ராஜிவ் சதுக்கம் வரையிலும், இ.சி.ஆரில் இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ் சதுக்கம் வரையிலும் கனரக, இலகு ரக வாகனங்கள், பஸ்கள் செல்ல அனுமதி இல்லை.

திண்டிவனம் மார்க்கம் திண்டிவனம்  சாலையில் கோரிமேடு பார்டரில் இருந்து ராஜிவ் சதுக்கம் நோக்கி வரும் அனைத்து வித கனரக வாகனங்கள், ரூட் பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும், கோரிமேடு ஜிப்மர் சந்திப்பில் இருந்து மேட்டுபாளையம் போக்குவரத்து முனையம் சாலையில் திரும்பி, வில்லியனுார் சாலை வழியாக இந்திரா சிக்னல் சதுக்கம் மூலம் நகர பகுதியை அடைய வேண்டும்.

காமராஜர் சாலையில் சாரம் சந்திப்பில் இருந்து ராஜிவ் சதுக்கம் மார்க்கமாக வரும் கனரக, இலகுரக வாகனங்கள் ரூட் பஸ்கள் அனைத்தும் சாரம் லெனின் வீதி சந்திப்பு, நெல்லிப்தோப்பு சந்திப்பு, இந்திரா சதுக்கம் மூலம், வில்லியனுார் சாலை வழியாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் அமைப்பு சிக்னல் முதல் இந்திரா ராஜிவ் சிக்னல் வரை இணைக்கும் மேம்பாலம் மொத்தம் 3.877 கி.மீ., நீளம் கொண்டதாக இருக்கும்.

இந்த மேம்பாலம் இந்திராசதுக்கத்திற்கு தெற்கே 430 மீட்டர் தொலைவில் துவங்கி, நுாறு அடி சாலை செல்கிறது. இந்திரா சதுக்கத்தில் 620 மீட்டர் வடக்கே இ.சி.ஆர் சாலையில் இறங்குகிறது. இதன் மொத்த நீளம் 2,200 மீட்டர் ஆகும். இந்திரா சதுக்கத்தில் 17 மீட்டர் உள்விட்டம் கொண்ட உயர்நிலை வடிவ மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்திரா சதுக்கத்தில் இருந்து கிழக்கில் பஸ்டாண்ட் வரை 863 மீட்டர் மேம்பால இணைப்பு, மேற்கில் விழுப்புரம் நோக்கி 300 300 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட உள்ளது.

ராஜிவ் சதுக்கத்தில் 40 மீட்டர் உள்விட்டம் கொண்ட வட்ட வடிவ மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. திண்டிவனம் நோக்கி 524 மீட்டர் அளவில் இணைப்பு அமைக்கப்பட உள்ளது. திட்டத்தின் சிறப்பு நகர போக்குவரத்து நெரிசல் 55 சதவீதம் குறையும் 35 நிமிடங்கள் எடுக்கும் போக்குவரத்து நேரம் 10 நிமிடமாக குறையும். தினமும் 60,000 வாகனங்கள் செல்ல முடியும் வாகன எரிபொருள் மிகுதியாக குறையும் 9,00,000 மக்கள் பயன் பெறுவர். இ.சி.ஆர்., திட்டத்தின் சிறப்பு அம்சம் எழில் கொஞ்சும் கடற்கரை அழகோடு, கடல் அலையின் மென்காற்றோடு பயணிக்கும்

இ.சி.ஆரில் கணபதி செட்டிக்குளம் முதல் ராஜிவ் சதுக்கம் வரை 13.63 கிலோ மீட்டர் நீளத்தில் மத்திய அரசு உதவியுடன 25.04 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளது. மைய தடுப்பு சுவர் 1.548 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைகிறது.  2.786 கி.மீ., சாலையோர வாய்க்காலும் அமைய உள்ளது.

பாபு ராஜேந்திரன்  புதுச்சேரி

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: