அருண் பசுமை இயக்கம், சிட்டு குருவி பசுமை வீடு இணைந்து புதுச்சேரி மாநிலத்தில் தேனீக்கள் மீட்பு மற்றும் மீட்பு பயிற்சி தொடங்கப்பட உள்ளது .
இது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்து அரசு சார்பில் உதவி செய்யும் படி கேட்டுக் கொண்டனர். தேனீக்களை காக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தேனீக்கள் மீட்பு மற்றும் மீட்பு பயிற்சி பல்வேறு அமைப்புகள் செய்து வருகின்றன.
இதில் சமூக ஆர்வலர் சுதந்திரச் செல்வன், புதுச்சேரி சமூக ஆர்வலர்களுடன் இணைந்து புதுவையில் தேனீ மீட்பு மற்றும் பயிற்சி தொடக்க விழா புதுவை முதல்வர் ஆலோசனையோடும் நடைபெற்றது.
விரைவில் புதுச்சேரியில் தேனீக்களை காக்கும் வகையில் பல்வேறு இடங்களில் தேனீ பண்ணை தொடங்கும் பணி நடைபெற உள்ளது.
புதுவையில் புதிய முயற்சியில் அருண் பசுமை இயக்கம், சிட்டு குருவி பசுமை வீடு இணைந்து சமூக ஆர்வலர்கள் அருண், பாபு ,நந்தகுமார், எலிசபெத் ஆகியோர் புதுவையில் இப்பணியை தொடங்கி உள்ளனர்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“