/indian-express-tamil/media/media_files/CUB7DbtpYcb3JDK0tgjH.jpg)
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி 75ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அரசியல் பிரமுகர்கள் அவரது ஆதரவாளர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக என்.ஆர். காங்கிரஸ் மாநில செயலாளர் வெற்றிவேலா குரூப்ஸின் நிறுவனமான எஸ்.எஸ். அழகு என்கிற அழகானந்தம் தலைமையில் முதல்வரை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பொன்னாடை அணிவித்தார்.
தொடர்ந்து, பிரம்மாண்ட உலர் பழங்கள், நட்ஸ், 50ரூபாய் பணக்கூடை, ஏலக்காய் மாலை, முந்திரி மாலை, பிஸ்தா மாலை, பிரம்மாண்ட மூலிகை குச்சியிலான நாற்காலி, பூக்கூடை, பழக்கூடை, உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பிறந்தநாள் சீர்வரிசையாக வழங்கி, வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பட்டுப் புடவைகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
தொடர்ந்து ஏழை குடிமகனுக்கு தள்ளுவண்டி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பாலு ஹரி பில்டர்ஸ் பாலகிருஷ்ணன் , சுகுமார், அரிகிருஷ்ணன் , விடியல் சபரி, மனோஜ் , அமேசான் சிவா, பவர் சைன் டெக்னாலஜிஸ் அருண்ராஜ் , பிரித்திவிராஜ் ,தென்னரசன் அம்மன் ஸ்கிரீன் பிரபாகரன், மாணிக்க செட்டியார் நகர் நாகராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.