இந்தியாவின் 79-வது சுதந்திர தினம்; புதுச்சேரி முதல்வர், ஆளுனர் வாழ்த்து!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் அயராத உழைப்பாலும், ஈடு இணையற்ற தியாகங்களாலும் நாம் பெற்ற சுதந்திரத்தின் அடையாளமாக ஒவ்வொரு வீட்டிலும் நாம் ஏற்றியுள்ள மூவர்ணக் கொடி, நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் உறுதிப்பாட்டின் கலங்கரை விளக்கமாக உள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் அயராத உழைப்பாலும், ஈடு இணையற்ற தியாகங்களாலும் நாம் பெற்ற சுதந்திரத்தின் அடையாளமாக ஒவ்வொரு வீட்டிலும் நாம் ஏற்றியுள்ள மூவர்ணக் கொடி, நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் உறுதிப்பாட்டின் கலங்கரை விளக்கமாக உள்ளது.

author-image
WebDesk
New Update
Puduchery

ஒரு வலுவான, வளமான, அமைதியான மற்றும் சமத்துவமான இந்தியாவை உருவாக்குவதற்கு ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என முதல்வர் ரங்கசாமி சுதந்திர தின வாழ்த்து செய்திகள் கூறியுள்ளார்

Advertisment

இது குறித்து அவர் குறிப்பிடுகையில். மக்கள் பெருமைமிக்க நமது பாரதத் திருநாட்டின் 79ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த நன்னாளில், புதுச்சேரி அனைவருக்கும் எனது அன்பான சுதந்திரதின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சுதந்திரப் போராட்ட வீரர்களின் அயராத உழைப்பாலும், ஈடு இணையற்ற தியாகங்களாலும் நாம் பெற்ற சுதந்திரத்தின் அடையாளமாக ஒவ்வொரு வீட்டிலும் நாம் ஏற்றியுள்ள மூவர்ணக் கொடி, நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் உறுதிப்பாட்டின் கலங்கரை விளக்கமாக உள்ளது.

அதுமட்டுமல்லாது, நமது ஜனநாயகத்தின் மாண்புகளைப் பாதுகாத்து, ஒரு வலுவான, வளமான, அமைதியான மற்றும் சமத்துவமான இந்தியாவை உருவாக்குவதற்கு ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்ற உறுதிப்பாட்டையும் இந்த தேசியக்கொடி நமக்குள் விதைக்கிறது. உலகிற்கு அன்பையும் நம்பிக்கையையும் தரும் இந்தியாவின் இறையாண்மையை உயர்த்திப்பிடிக்க நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும் என்று கூறி, அனைவருக்கும் எனது அன்பான சுதந்திர தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

புதுச்சேரி கவர்னர் கைலாஷ் நாதன், நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற இந்த நாளில், இந்திய குடிமக்கள் அனைவருக்கும் குறிப்பாக, புதுச்சேரி வாழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த சுதந்திரதின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் நாம் சுதந்திரம் அடைந்தோம். அவர்களுடைய தியாகங்களைப் நினைத்துப் போற்றுவது நம்முடைய கடமை.

Advertisment
Advertisements

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில் சுதந்திரம் அடைந்த 100-வது ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதம் ‘விக்சித் பாரத்@2047’ என்ற உன்னத இலக்கை நோக்கி நாம் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். இந்திய தேசத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காத்திட நாம் இந்த நாளில் நாம் உறுதி ஏற்போம். நம் அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுவோம். வீடுதோறும் தேசியக்கொடி“ - மக்கள் இயக்கத்தில் இணைந்து நமது தேசப்பற்றையும், ஒற்றுமை உணர்வையும் பறைசாற்றுவோம்

புதுச்சேரி முன்னாள் முதல்வர், நாராயணசாமி, புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த சுதந்திர திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அந்நிய ஆதிக்க சக்தியாக இருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தை எதிர்த்து அண்ணல் காந்தியடிகள் தலைமையிலே சர்தார் பட்டேல், பண்டிதர் நேரு, மௌலானா ஆசாத், சுபாஷ் சந்திர போஸ், அன்னி பெசண்ட் போன்ற தலைவர்கள் எல்லாம் தொடர்ந்து வெள்ளையனை வெளியேறு என்ற கோஷத்தை முன்வைத்து பல கட்ட போராட்டங்களை நடத்தி உண்ணாவிரதம் ஒத்துழையாமை இயக்கம் என்று தொடர் போராட்டங்களை நடத்தி பல உயிர் தியாகங்களை செய்து நாம் சுதந்திரம் அடைந்தோம். 

இந்த சுதந்திர காற்றை நாம் சுவாசிப்பதற்கு லட்சக்கணக்கான இந்தியர்கள் சிறையில் இருந்தும் படுகொலை செய்யப்பட்டும் பிரிட்டிஷ்  அடக்கு முறையால் பல இன்னலுக்கு ஆளாகிறார்கள். இவைகள் எல்லாம் மீறி தேச பக்தர்கள் எல்லாம் ஒன்றிணைந்து வெள்ளையனை இந்த நாட்டில் இருந்து வெளியேற்றினர். அன்று ஆர். எஸ்.எஸ். போன்ற இயக்கங்கள் எல்லாம் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் பிரிட்டிஷ்காரர்களுக்கு வால்படிக்கின்ற கூட்டங்களாக இருந்து வந்தது.

இந்திய நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அண்ணல் காந்தியடிகள் இந்திய நாட்டு மக்களிடத்தில் அனைவரிடத்திலும் ஒற்றுமை இருக்க வேண்டும் மற்றும் அமைதியை உருவாக்குவதற்கு அரும்பாடுபட்டார்.  இந்தியா பாகிஸ்தான் பிரிவை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த பிரிவுக்கு பிறகு இந்தியா ஒரு வளர்ந்த நாடாக  கொண்டுவருவதற்கு பண்டிதர் நேரு அவர்களது தலைமையிலே சிறப்பான ஆட்சியை கொடுத்திருக்கிறார்.  

பண்டிதர் நேருக்கு பிறகு லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி அம்மையார், தலைவர் ராஜீவ் காந்தி, திரு. நரசிம்மராவ், டாக்டர் மன்மோகன் சிங் போன்ற தலைவர்கள் எல்லாம் இந்தியாவோட வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டு இருக்கிறார்கள். அவர்களையும் நாம் நினைவு கூற வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் நாம் பிரெஞ்சு ஏகாதிபத்தை எதிர்த்து போராடி திரு.வெங்கடசுப்பா ரெட்டியார், குபேர், அன்சாரி துரைசாமி, சுப்பையா அவர்களின் தலைமையிலே சுதந்திரத்தை அடைந்தோம். இரத்தம் சிந்தி நாம் அடைந்த சுதந்திரத்தை பேணி காக்க வேண்டியது நம் அனைவருடைய கடமை ஆகும். 

இந்தியா ஒரு சுதந்திர நாடாக தொடர வேண்டும் என்பதிலே நாம் உறுதியாக இருக்கின்றோம். ஆகவே நாம் அனைவரும் இந்திய சுதந்திர தினத்தை மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று புதுச்சேரி மாநில மக்கள் அனைவரையும் வேண்டி  கேட்டுக்கொள்கிறேன்.

புதுச்சேரி காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கம், இந்தியாவின் 79-வது சுதந்திர தின நாளை கொண்டாடும் நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக புதுச்சேரி யூனியன் பிரதேச மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கின்றேன். இந்நன்னாளில் சுதந்திரப் போராட்டத்திற்காக தங்களது இன்னுயிரை இழந்த வீரர்களையும், தியாகிகளையும் போற்றி நினைவு கூர்வோம்.

தேர்தல் ஆணையம் சுதந்திரமாகவும் உண்மைத்தன்மையுடனும் மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக செயல்பட்டால் மட்டுமே அரசியலமைப்பு பாதுகாக்கப்படும். எனவே தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டு நாட்டிற்காக உயிர் நீத்த தலைவர்களின் எண்ணப்படி ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற்று மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் மக்களாட்சி அமைய வேண்டும் என்று கூறி மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கின்றேன் என்று கூறியுள்ளார்.

செய்தி: பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: