புதுச்சேரியில் மஞ்சள் அட்டை வைத்துள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ 1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பட்ஜெட் மீதான சட்டமன்ற உறுப்பினர்களின் விவாவதத்திற்கு பிறகு பேரவையில் பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி மக்களை பாதிக்காத வகையில் வரி உயர்த்தப்பட்டு மாநில வருவாய் உயர்த்தப்படும். நல்ல பட்ஜெட்டை நாம் கொடுத்துள்ளோம். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும்.
புதுச்சேரி மாநில மக்கள் வளர்ச்சிக்காக அனைத்து தொகுதிகளிலும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் சேதராப்பட்டில் தொழிற்பேட்டை கொண்டுவரப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் அரசின் எந்த நலத்திட்ட உதவிகளையும் பெறாத மஞ்சள் அட்டை வைத்துள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும். ஏற்கனவே சிவப்பு அட்டை வைத்துள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூ. 2500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.