புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் ஆசிரியர் திருநாள் விழா கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டப அரங்கத்தில் நடைபெற்றது.
இதில், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்ற விழாவில் சட்டப்பேரவை தலைவர் செல்வம், முதல்வரின் பாராளுமன்ற செயலர் ஜான் குமார் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு, புதுவை அரசால் நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 21 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தனர்.
விழாவில் தலைமை செயலர் ராஜு வர்மா, கல்வித்துறை அரசு செயலர் ஜவகர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் உட்பட மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
விழாவின் முடிவில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ரங்கசாமி, “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிற முறையை நாங்கள் வரவேற்கிறோம். அதில் எங்களுக்கு முழு உடன்பாடு இருக்கிறது.
நாட்டில் ஏற்கனவே ஒரே நேரத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், இந்தியாவை பாரத் என்று அழைப்பதை வரவேற்கிறேன் என்றும், பாரத தேசம் என்பது பழமையான சொல் என்றார்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“