புதுச்சேரி சுதந்திர தின விழா; 3 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கி கௌரவித்த முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்; தேசிய கொடியை ஏற்றிய முதலமைச்சர் ரங்கசாமி; காவல் துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது, முதலமைச்சர் பதக்கம், ராஜீவ் காந்தி விருது வழங்கி கௌரவிப்பு

புதுச்சேரியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்; தேசிய கொடியை ஏற்றிய முதலமைச்சர் ரங்கசாமி; காவல் துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது, முதலமைச்சர் பதக்கம், ராஜீவ் காந்தி விருது வழங்கி கௌரவிப்பு

author-image
WebDesk
New Update
puducherry iday 2025

புதுச்சேரியில் சுதந்திர தின விழாவை ஒட்டி முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றி வைத்து 3 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கி கௌரவித்தார்.

Advertisment

புதுச்சேரியில் 79 ஆவது சுதந்திர தின விழாவை ஒட்டி புதுச்சேரி குபேர சாலை கடற்கரை சாலையில் காந்தி சதுக்கத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தேசிய ஏற்றி வைத்து போலீஸ் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். பின்பு புதுவையில் சிறப்பாக பணியாற்றிய மூன்று போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கினார். தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தார்.

புதுச்சேரியில் சிறப்பாக பணியாற்றிய 3 போலீஸ் அதிகாரிகள் ஜனாதிபதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி விருது சுதந்திர தினத்தையொட்டி காவல்துறை, தீயணைப்புத் துறை, ஊர்க்காவல் படை போன்றவற்றில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு ஜனாதிபதி விருது ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம்.

அதன்படி போலீஸ் ஐ.ஜி. அஜித்குமார் சிங்லா, மாகி போலீஸ் சூப்பிரண்டு சரவணன், உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பாக பணியாற்றியதாக ஜனாதிபதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Advertisements

மறுபுறம் புதுவை காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் போலீசாருக்கு சுதந்திர தினத்தையொட்டி முதலமைச்சர் விருது, ராஜீவ்காந்தி விருது உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டது.

அதன்படி முதலமைச்சர் பதக்கம் மங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி, காவல்துறை தலைமையகம் சிறப்புநிலை சப்-இன்ஸ்பெக்டர் சிந்து, உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரமொழி (காவல்துறைதலைமையகம்), மனோஜ்குமார் (மாகி) ஆகியோருக்கு இன்று முதல்வர் ரங்கசாமி வழங்கி கௌரவித்தார்.

ராஜீவ்காந்தி விருது சப்-இன்ஸ்பெக்டர்கள் இளவரசன் (போக்குவரத்து-வடக்கு), ராஜூ (ஏனாம்) உள்பட 20 பேருக்கு முதல்வர் ரங்கசாமி வழங்கி கௌரவித்தார்

மேலும் டி.ஜி.பி. பாராட்டு சான்றிதழ், கமாண்டன்ட் பாராட்டு சான்றிதழ், கமாண்டன்ட் ஜென்ரல் பாராட்டு சான்றிதழ் தலா 5 பேருக்கு இன்று முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

நாளை பதினாறாம் தேதி சட்டபூர்வ பரிமாற்ற நாளையொட்டி முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் அமைச்சர்கள் எம்.பி மற்றும் எம்.எல்ஏ.,க்கள் கீழூர் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தைப் போற்றும் விதமாக கீழுர் நினைவு மண்டபத்தில் கொடியேற்றி மரியாதை செலுத்துகின்றனர்.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

Independence Day Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: