சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரை துவக்கி வைக்க வேண்டி, முதல்வர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்தார்.
புதுச்சேரி சட்டசபையில் வரும் 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 9ம் தேதி துவங்குகிறது.
புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் வரும் 13ம் தேதி நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.சட்டசபை கூட உள்ளதையொட்டி, முதல்வர் ரங்கசாமி இன்று (மார்ச் 3) ராஜ்நிவாஸ் சென்று, கவர்னர் தமிழிசையை சந்தித்துp பேசினார்.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் பட்ஜெட் கூட்டத் தொடரை துவக்கி வைக்க கவர்னருக்கு, முதல்வர் அழைப்பு விடுத்தார்.இந்த சந்திப்பின் போது சட்டப்பேரவை தலைவர் செல்வம் உடனிருந்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“