Advertisment

புதுச்சேரியை புரட்டிப் போட்ட ஃபீஞ்சல் புயல்: நிவாரணம் அறிவித்த ரங்கசாமி

புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Puducherry cm rangasamy relief fund cyclone fengal heavy rain fall Tamil News

சேதம் அடைந்த கூரை வீடு ஒன்றுக்கு ரூ.10,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான ஃபீஞ்சல் புயல் புதுச்சேரி அருகே நேற்று முனத்தினம் சனிக்கிழமை இரவு கரையைக் கடந்தது. இதனால், புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது. புயல் கரையை கடந்த நிலையில், அங்கு 48 செ.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. புயலுக்குப் பிறகு புதுச்சேரி தற்போது மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது . 

Advertisment

விடுமுறை

இதனிடையே, வெள்ளம் சூழ்ந்த பகுதியிலிருந்த மக்கள் மீட்பு படைகள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. புதுச்சேரியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

உயிரிழப்பு

Advertisment
Advertisement

புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் புதுச்சேரியில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்திய ராணுவப் படையினர் நேற்று வந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த புயலால் கடுமையாக புதுச்சேரி பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட மக்கள், அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

நிவாரணம்

இந்த நிலையில், புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

மாட்டிற்கு ரூ.40,000, கிடாரி கன்று குட்டிக்கு ரூ.20,000, சேதம் அடைந்த படகு ஒன்றுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்கப்படும். அதே போல விலை நிலம் ஹெக்டேருக்கு ரூ. 10,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சேதம் அடைந்த கூரை வீடு ஒன்றுக்கு ரூ.10,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். புதுவையில் மழைக்கு இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 208 முகாம் அமைக்கப்பட்டு 85,000 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry N Rangasamy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment