/indian-express-tamil/media/media_files/2025/05/16/5C3xOu0E5iWZDCZsKrVQ.jpg)
அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் உயர்கல்வியில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மீனவர்களுக்கு நிதி வழங்கும் விழாவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசினார்.
புதுவை அரசு மீன்வளத் துறை சார்பில் மீன்பிடி தடை கால நிவாரணம், வழங்கும் விழா நடந்தது. நிவாரண தொகை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வழங்கினார் மீனவ குடும்ப ரூ.13 கோடியே நிவாரண வழங்கப்பட்டது
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசுகையில், சுற்றுலாவை மேம்படுத்தட புதுவையில் சுற்றுலா பயணிகள் வருகை உயர்ந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் படகு பயணம் செல்ல 34 படகுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவை மேம்படுத்த ஒத்துழைப்பு தர வேண்டும். நல்லவாடு பகுதியில் துறைமுகம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசு பள்ளியில், படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் மருத்துவம் பிற படிப்புகளுக்கு, 10 சதவீதம் இடஒதுக்கீடு, அரசு பள்ளி மாணவர்கள் சிறப்பான தேர்ச்சி பெற்று சந்தேகங்களை பொய்யாக ஆக்கியுள்ளனர்.
அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர் சமுதாய மக்களுக்கு ஒதுக்கிய நிதி முழுமையாக அவர்களுக்கு செலவிடப்படும், மீனவர்களின் வாழ்க்கை உயர வேண்டும் என்பது அரசின் எண்ணம். மீன்பிடி தொழில் மூலம் அவர்களின் வருமானத்தை உயர்த்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார். இந்த விழாவில், எம்.எல்.ஏ.பாஸ்கர், மீன்வளத்துத்துறை செயலர் மணிகண்டன், இயக்குனர் இஸ்மாயில், இயக்குனர் தெய்ளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.