முதல்வர் ரங்கசாமி யஹமாகா ஆர்.எக்ஸ் 100 பைக் பிரியர். என்பது அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு தேர்தல் ஓட்டு பதிவின்போதும், தனது ராசியான யஹமாகா பைக்கில் ஓட்டுச்சாவடிகளுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். சமீபத்தில் தன்னுடைய யஹமாகா பைக்கை சென்னைக்கு அனுப்பி பழுது பார்த்து கொண்டு வந்தார். புதிய பைக்காக தற்போது அவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 19ஆம் தேதி நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக அந்த பைக்கில் தான் சென்றார்.
அதைத் தொடர்ந்து, கடந்த 1997ம் ஆண்டு, ரங்கசாமி எம்.எல்.ஏ.வாக இருந்தபோது அம்பாசிடர் கார் ஒன்றை முதன் முதலில் வாங்கி பயன்படுத்தினார். அம்பாசிடர் கார் சற்று பழுதானதால் வீட்டில் ஓரமாக நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது அம்பாசிடர் காரை பழுது நீக்கி பயன்படுத்த முதல்வர் முடிவெடுத்து காரை துாத்துக்குடிக்கு அனுப்பினார்.
அங்கு பழுதுகள் சரிசெய்யப்பட்டு புது பொலிவுடன் அம்பாசிடர் கார் புதுச்சேரிக்கு கொண்டுவரப்பட்டது. திலாஸ்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட அம்பாசிடர் காரை முதல்வர் ரங்கசாமி ஆர்வமுடன் தொட்டு பார்த்துடன், காரின் முன் இருக்கையில் அமர்ந்து மகிழ்ந்தார். இனி உள்ளூரில் செல்லும்போது, அம்பாசிடர் காரை பயன்படுத்த தனது உதவியாளர்களிடம் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“