puducherry | india: புதுச்சேரி ஊசுடு தொகுதிக்குட்பட்ட குருமாம்பேட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஆதிமூலம்; இவரது மகள் காயத்ரி (19).கிருமாம்பாக்கத்தில் உள்ள ராஜீவ் காந்தி தனியார் பொறியியல் கல்லூரியில் காயத்ரி படித்து வருகிறார்.
இதனிடையே உடல் நலக்குறைவு காரணமாக மூலக்கூலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட காயத்ரி, சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.டெங்கு காய்ச்சல் காரணமாக மாணவி உயிரிழந்ததாக மருத்துவமனை அறிவித்துள்ளது.
மாணவி இறந்த தகவல் அறிந்து கல்லூரி மாணவ -மாணவிகள் குருமாம்பேட்டில் வைக்கப்பட்டுள்ள மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். டெங்கு காய்ச்சலால் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“