நேஷனல் ஹெரால்டு வழக்கில் இ.டி குற்றப்பத்திரிகை தாக்கல்: 'மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை' - புதுச்சேரி காங்,. ஆர்ப்பாட்டம்

'நேஷனல் ஹெரால்டு' வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், சோனியா காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருப்பதை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

author-image
WebDesk
New Update
Puducherry Congress cadre protest National Herald corruption case ED chargesheet Sonia Gandhi and Rahul Gandhi Tamil News

'நேஷனல் ஹெரால்டு' வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், சோனியா காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருப்பதை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

'நேஷனல் ஹெரால்டு' வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், சோனியா காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருப்பதை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

Advertisment

மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து இன்று மாலை புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, "மத்திய பா.ஜ.க அரசு ஆட்சியின் அரசியல் பழிவாங்கல்களுக்கு  ஓர் எல்லையே இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. காங்கிரஸ் தலைவர்கள் அன்னை சோனியா காந்தி மற்றும் இளம் தலைவர் ராகுல் காந்தி மீதான, அற்பத்தனமான, அரசியல் உள்நோக்கம் கொண்ட, ஜோடிக்கப்பட்ட 'நேஷனல் ஹெரால்டு' வழக்கைப் பயன்படுத்தி, காங்கிரஸ் தலைவர்கள் மீது தற்போது அமலாக்கத் துறையின் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையானது ஒன்றிய அரசிற்கு எதிரான எதிர்ப்புக் குரல்களை மிரட்டி அதிகார துஷ்பிரயோகம் செய்து அமைதிப்படுத்துவதன் முயற்சிக்கு செய்து கொண்டிருக்கிறது. கடும் விலைவாசியேற்றம், வேலை வாய்ப்பின்மை போன்ற மக்களின் அன்றாட வாழ்க்கையின் அல்லல்களைக் தீர்க்கத் தவறிய மத்திய அரசு அரசு, மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் செய்யும் இச்செயல் அவர்களது கையாலாகாத் தனத்தை வெளிப்படுத்துகிறது 

அழிவுகரமான பா.ஜ.க-வின் ஆட்சிக்கு எதிரான நமது உறுதியை மேலும் வலுப்படுத்தவே இந்த ஆர்ப்பாட்டம். அன்னை சோனியா காந்தி, இளம் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது பொய் வழக்குப் போட்டு, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள, மோடி-பழிவாங்கும், மிரட்டல் அரசியலுக்கு நமது கடும் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசைக்  கண்டித்து ஆர்ப்பாட்டம்." என்று முழக்கம் எழுப்பினர். 

Advertisment
Advertisements

செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி. 

Enforcement Directorate Congress Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: