ராகுல் புகைப்படத்தை செருப்பால் அடித்த பா.ஜ.க நிர்வாகிகள்: நடவடிக்கை எடுக்க புதுச்சேரி காங்கிரஸ் கோரிக்கை

புதுச்சேரியில் பா.ஜ.க நடத்திய பேரணியில் ராகுல் காந்தி புகைப்படத்தை செருப்பால் அடித்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் பெரிய கடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்

புதுச்சேரியில் பா.ஜ.க நடத்திய பேரணியில் ராகுல் காந்தி புகைப்படத்தை செருப்பால் அடித்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் பெரிய கடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்

author-image
WebDesk
New Update
Puducherry Congress demands action for BJP officials hit Rahul Gandhi photo with sandals Tamil News

புதுச்சேரியில் பா.ஜ.க நடத்திய பேரணியில் ராகுல் காந்தி புகைப்படத்தை செருப்பால் அடித்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் பெரிய கடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்

புதுச்சேரியில் பா.ஜ.க நடத்திய பேரணியில் ராகுல் காந்தி புகைப்படத்தை செருப்பால் அடித்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் பெரிய கடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக புதுச்சேரி மாநில பொது செயலாளரும், அகில இந்திய செயற்குழு உறுப்பினருமான இளையராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

Advertisment

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்  முன்னாள் தலைவரும், இந்திய நாட்டின் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி  பிகார் மாநிலத்தில் நடந்து வரும் பேரணியில் மூன்று முறை நடந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்குகளை திருடி மோடி எப்படி ஆட்சிக்கு வந்தார் என்பதை விளக்கி மக்களிடத்தில் பேசி வருகிறார். மோடி, ராகுல் காந்தி பேச்சுக்கு விளக்கம் அளிக்காமல பீகாரில் ஆட்சி அதிகாரத்தை வைத்து கொண்டும் தங்களுடைய கைக்கூலிகளை வைத்துக் கொண்டும், காங்கிரஸ் கட்சி ஆபீஸை அடிப்பதும், உடைப்பதும், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அடிப்பது என தவறான வழியை பின்பற்றி வருகிறார்கள்.  மதவெறி பிடித்த பா.ஜ.க தலைவர்கள், மேலும் காவல் துறை அதிகாரிகளை வைத்துக் கொண்டு காங்கிரஸ் நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவது, கோழைத்தனமாக சிறுபிள்ளை தனமான முறையில் பல தவறுகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார் பா.ஜ.க-வின் மோடி. 

புதுச்சேரி மாநிலத்தில் ராகுல் காந்திக்கு எதிராக பேரணி  நடத்தினார்கள். அந்த பேரணியில் ராகுல் காந்தி படத்தை செருப்பால் அடித்தும், மோசமான வார்த்தைகளை பேசியும், அவருடைய உருவ பொம்மையை கொளுத்துவதும் என அருவறத்தக்க முறையில் அராஜக செயல்களை  பா.ஜ.க-வினர் நடு ரோட்டில் செய்து உள்ளனர். இது போல இழிவான செயல்களை எந்த கட்சியினரும் இவ்வளவு மோசமான முறையில் செய்தது கிடையாது. அசிங்கம் பிடித்த செயல்களை செய்த பா.ஜ.க-வின் மாநில தலைவர், அமைச்சர், முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை வன்மையாக கண்டிக்கிறேன். அனைவரின் மீதும் காவல் துறை வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும். வழக்கு பதிவு செய்யவில்லை என்றால் காவல்துறையை கண்டித்து மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.

புதுச்சேரி மாநில மக்கள் தலையில் மிகப்பெரிய அளவில் கடனை சுமையை ஏற்றி வைத்துள்ளார். புதுச்சேரி மாநில சொத்தான துறைமுகம், மின் துறை இரண்டையும் அதானிக்கு தாரை வார்த்து கொடுத்துள்ளார். பா.ஜ.க என்றாலே மக்களுக்கு நினைவில் வருவது ஜாதி மத மோதல் பிரிவினையை உருவாக்கி அதில் அரசியல் லாபம் பார்பவர்கள் என்று இந்த உலகமே அறியும்.

Advertisment
Advertisements

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது  ஜிப்மர் மருத்துவமனை, காலாப்பட்டு பல்கலை கழகம், விமான நிலையம், சட்டப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலை கூடம், அரசு இன்ஜினியரிங் காலேஜ், அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரி, வேளாண் கல்லூரி, உலகம் தர வாய்ந்த என்.ஐ.டி கல்லூரி, ஓஎன்ஜிசி, கேந்திரிய வித்யா பள்ளி, பல்வேறு மாநிலங்களுக்கு புதுவையில் இருந்து ரயில் போக்குவரத்து, அரசு குழந்தைகள் மருத்துவமனை, அரசு செவிலியர் கல்லூரி, அரசு பெருந்தலைவர் காமராஜர் அறிவியல் கலைக் கல்லூரி, மற்றும் ஏ .எஃப்.டிமில், அரியூர் சுகர் மில், திருபுவனை ஸ்பின்னிங் மில், காரைக்கால் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மில், சுதேசி மில், பாரதி மில் மற்றும் பல ஊர்களில் அரசு பள்ளிகள், அரசு கட்டிடங்கள் என புதுச்சேரி மாநில மக்களின்  வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செய்து கொடுத்து உள்ளது காங்கிரஸ் பேரியக்கம்.

மோடி பாராளுமன்றத்திலும், வெளியிடங்களிலும் , பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி  பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு  பதிலே அளிக்கவே பயப்படுகிறார். மோடி மூன்று முறையும் தேர்தலில் முறைகேடு செய்து தான் ஆட்சிக்கு வந்துள்ளார் என்று தலைவர் ராகுல் காந்தி ஆணித்தரமாக, வெட்ட வெளிச்சமாக மக்களிடத்தில் படம் போட்டு கூறினார். மோடியால் முதலில் முறைகேடுகள் நான் எதுவும் செய்ய இல்லை என்று தைரியமாக கூற முடியுமா ? மோடி உண்மையானவராக இருந்தால் ஆட்சியை கலைத்து விட்டும்  தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜப்பான், இங்கிலாந்து  நாடுகளில்  மக்கள் சீட்டு மூலம் வாக்காளிக்கும் நடைமுறை உள்ளது போல், இந்தியாவில் தேர்தலை நடத்த தயாரா என்று மோடியால் கூற முடியுமா ?

மோடி குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக அத்வானி  துணையுடன் குறுக்கு வழியில் வந்தவர் தானே அதனால் தான் தேர்தல் நடைமுறையில் பல்வேறு தில்லுமுல்லு வேலைகளை செய்து  தலைவர் ராகுல் காந்தி வர வேண்டிய பிரதமர் பதவியை குறுக்கு வழியில் திரும்பவும் தட்டிப்  பறித்துள்ளார் மோடி.  பல்வேறு தில்லுமுல்லு களை செய்து குறுக்கு வழியில் பதவிக்கு வந்த மோடியை பார்த்து தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கேள்விகள் கேட்டால் பதில் சொல்ல தைரியம் இல்லாமல் புதுச்சேரி பா.ஜ.க-வினர் அவமரியாதை செய்கின்றனர். நீங்கள் செய்யும் அராஜகங்களை பார்த்துக் கொண்டு இனியும் சும்மா இருக்க மாட்டோம். பதிலுக்கு நாங்களும்  திருப்பி பதில் அடி கொடுப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோன். ராகுல் காந்தி தலைவர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு அகிம்சை வழியை தான் பின்பற்ற வேண்டும் என்று சொல்லித் தந்துள்ளார் அதனால் பொறுமையாக இருக்கிறோம். நாங்கள் திருப்பி அடித்தால் தாங்க மாட்டிர்கள்.

பீகார் மாநிலத் தேர்தல் முடிந்தவுடன் மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழும் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இந்திய நாட்டின் பாரத பிரதமராக பதவி ஏற்பார். பல்வேறு தில்லுமுல்லுகளை செய்த மோடி , அமித்ஷா ஆட்சியில் என்னவெல்லாம் தவறு செய்தார்களோ அதற்கெல்லாம்  மக்களிடத்தில் பதில் சொல்லியே தீர வேண்டிய நிலை வரும். அப்போது கண்டிப்பாக இருவரும் ஜெயிலுக்கு செல்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.  

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: