/indian-express-tamil/media/media_files/2025/10/08/whatsapp-image-2025-10-2025-10-08-17-40-28.jpg)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்படும், வெகுமதித் தொகையை ரூ.6000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரி கட்டுமான தொழிலாளர்கள், பெண்கள் 200-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி கட்டுமான நல வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்படும், வெகுமதித் தொகையை ரூ.6000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும், கட்டுமான தொழிலாளர்க்கு விபத்துக் காப்பீட்டுத் தொகையை ரூ.6 இலட்சம் என உயர்த்தி வழங்கிட வேண்டும், தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு மீண்டும் கல்வி உதவித் தொகையாக ரூ.25,000-ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும்.
நலவாரிய நிதியை முழுமையாக கட்டிட தொழிலாளர்களுக்கே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் புதுச்சேரி மாநில குழு சார்பில் 200-க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள கட்டிட தொழிலாளர் நல வாரியத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.