தற்கொலைக்கு முயன்ற தம்பதி அடுத்தடுத்து மரணம்: புதுச்சேரியில் சோகம்

புதுச்சேரி கூடப்பாக்கத்தில் வசித்து வந்த வயது முதிர்ந்த தம்பதி தற்கொலைக்கு முயன்று மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி கூடப்பாக்கத்தில் வசித்து வந்த வயது முதிர்ந்த தம்பதி தற்கொலைக்கு முயன்று மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Puducherry Couple who attempted suicide die one after another Tragedy Tamil News

புதுச்சேரி கூடப்பாக்கத்தில் வசித்து வந்த வயது முதிர்ந்த தம்பதி தற்கொலைக்கு முயன்று மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் மாரிதுரை (வயது83). இவரது மனைவி முத்துலட்சுமி (வயது74). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இவர்களது மகன் ஆனந்த் (52). புதுச்சேரி கூடப்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவரது மனைவி கலா, 2 குழந்தைகள் உள்ளனர். ஆனந்த் மடுகரையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ஊழியராக பணியாற்றி வருகிறார். மகள்கள் கும்பகோணத்தில் வசித்து வருகின்றனர். மாரிதுரை, முத்துலட்சுமி ஆகியோர் மகன், மகள்கள் வீட்டில் மாறி மாறி வசித்து வந்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில், கடந்த 2 மாதமாக ஆனந்தின் பராமரிப்பில் தாய், தந்தை வசித்து வந்தனர். இதற்கிடையே அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களை ஆனந்த் கூடப்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றார். அவர், அங்கிருந்து வீட்டிற்கு செல்லும்படி கூறிவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர் அவர்கள் அங்கிருந்து கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு பத்துக்கண்ணு பகுதியில் உள்ள வாய்க்காலில் குதித்து மாரிதுரை, முத்துலட்சுமி ஆகியோர் தற்கொலைக்கு முயன்றனர்.

இதனை கண்டவுடன் அங்கிருந்தவர்கள் வாய்க்காலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தம்பதியை மீட்டு கரைக்கு பத்திரமாக கொண்டு வந்தனர். பின்னர் அவர்களை தனியார் ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாரிதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முத்துலட்சுமிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி மாரிதுரை நேற்று அதிகாலை 4.25 மணிக்கு சிகிச்சை பரிதாபமாக உயிரிழந்தார். தனது கணவர் இறந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி காலை 6.10 மணிக்கு உயிரிழந்தார். தற்கொலைக்கு முயன்ற தம்பதியை காப்பாற்றிய நிலையில், அவர்கள் அடுத்தடுத்து உயரிழந்த சம்பவம் கூடப்பாக்கம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி. 

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: